[X] Close

நலம் தரும் நவராத்திரி : தரித்திரம் விலக்குவாள் துர்கை!


navarathiri-spl

  • வி.ராம்ஜி
  • Posted: 10 Oct, 2018 10:53 am
  • அ+ அ-

   வி.ராம்ஜி

   அம்பிகையின் வடிவங்கள் ஆயிரம். அதில் முக்கியமானதொரு வடிவம் துர்கை. அதனால்தான் சிவாலயங்களிலும் பெருமாள் கோயில்களிலும் ஸ்ரீதுர்கைக்கு சந்நிதி உள்ளது.

  சிவாலய துர்கையை சிவதுர்கை என்பார்கள். பெருமாள் கோயிலில் அமைந்துள்ள துர்கையை விஷ்ணு துர்கை என்று போற்றுவார்கள். ஒருநாளில் உள்ள காலநேர ங்களில், ராகுகாலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அப்படியான ராகுகாலவேளையில், ஸ்ரீதுர்கையை தீபமேற்றி வழிபடுவது, வாழ்வில் சகல நன்மைகளையும் வழங்கக் கூடியது என்பது ஐதீகம்!

  துர்கை என்றால் ‘அகழி’ என்றும் அர்த்தமுண்டு. அதாவது, அடியவர்களுக்கு அகழி போல் அரணாக இருந்து அவர்களைப் பாதுகாப்பவள் என்று அர்த்தம்.

   துர்க்கமன் என்ற அரக்கனைக் கொன்று அடியார்களைக் காத்ததால், துர்கை என்று தேவி பெயர் பெற்றாள் என்கிறது புராணம்.

 மூன்று சக்திகளின் ஒன்றிணைந்த வடிவமாகத் தோன்றியவள் துர்கை என்றும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். துர்கையைத் தமிழில் ‘கொற்றவை’ என்பர்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்கைக்கு உரிய அற்புதமான நாட்கள். இந்த மூன்று நாட்களும் துர்கையையும் துர்கையை நினைத்தும் வழிபாடு செய்யச் செய்ய, வீட்டில் உள்ள தரித்திரம் விலகும். தீய சக்திகள் தவிடுபொடியாகும். எதிர்ப்புகள் காணாது போகும் என்பது ஐதீகம்!

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close