[X] Close

நலம் தரும் நவராத்திரி :   சுண்டல் எதற்காக?


navarathiri-spl

  • வி.ராம்ஜி
  • Posted: 09 Oct, 2018 19:03 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

   நவராத்திரியின் ஒன்பது நாள் வைபவத்தின் போதும் சுண்டல் நைவேத்தியம் செய்யப்படுகிறது. பாயச வகைகளும் செய்யப்படுகின்றன. தினமும் ஒவ்வொரு விதமான சுண்டலோ பாயசமோ படையலிடுவதற்கு காரணம்  சொல்கிறார்கள் முன்னோர்கள்.

  அதாவது தேவர்களுக்கு சிவபெருமான் அமிர்தம் தந்து காத்தருளினார் அல்லவா. அதேபோல், பூமியும் பூமியில் உள்ள மக்களும் உயிர் வாழ்வதற்கு மழை எனும் அமிர்தத்தைத் தந்தருளினார்கள் சிவனாரும் திருமாலும்!

 இந்த மழையால் பூமி செழித்துக் கொழித்தது.  தானியங்கள் கண்ணென விளைந்தன.

 தானியங்கள் என்பவையே சக்தி. எனவே சக்தி எனும் பெண்ணுக்கு தானியங்களைக் கொண்ட சுண்டல், பாயசம் முதலானவை நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு, உணவாக வழங்கப்படுகிறது. பூஜைக்கு வருகிற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அனைவருக்கும் விநியோகிக்கப்படுகிறது.

  தவிர, புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதங்களில் அடைமழை பெய்யும். இதனால் தோல் நோய் முதலானவை ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

இந்த நோய்களைப் போக்கும் சக்தி, தானியங்களுக்கு உண்டு. ஆகவே, நவராத்திரி நாட்களில், சுண்டலாகவும் பாயசமாகவும் தானியங்களைச் செய்து அனைவருக்கும் வழங்கினார்கள் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

எந்த விஷயத்தைச் செய்தாலும் அதில் காரணங்களும் காரியங்களும் உள்ளடக்கிச் சொல்லியிருக்கிற முன்னோரையும் சாஸ்திர சடங்கு சாங்கியங்களையும் புரிந்து உணர்ந்து கொண்டாடுவோம்!

வாக்களிக்கலாம் வாங்க

'துப்பாக்கி முனை' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close