[X] Close

நலம் தரும் நவராத்திரி : சிவராத்திரி... நவராத்திரி!


nalam-tharum-navarathiri

  • வி.ராம்ஜி
  • Posted: 08 Oct, 2018 11:32 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

   சிவராத்திரி சிவனுக்கு உகந்தது; தேவியருக்கு உகந்தது நவராத்திரி! ‘நவம்’ என்ற சொல் ஆன்மிகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. ‘நவ நவமாய் பெருகும்’ என்று ஆச்சார்யர்கள் சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.  

  நவக்கிரகம்,  நவரத்தினம்,  நவதானியம், நவயோகம், நவரசம்,  நவபாஷாணம், நவகற்பம்,  நவமேகம்,  நவநிதிகள் என்று  ஒன்பதின் பெருக்கத்தை விசேஷமாகச் சொல்கின்றன இந்த வார்த்தைகள். அந்த வகையில், நாடு முழுவதும் ஒன்பது நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது  நவராத்திரி!

 எப்போது நவராத்திரி?

புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி காலம்.

  நவராத்திரி பண்டிகை முடிந்து வரும் தசமி திதியை ‘விஜயதசமி’ என்று கொண்டாடி நிறைவு செய்கிறோம்.

பொதுவாகவே, பிரதமை, அஷ்டமி, நவமி ஆகிய திதிகளை சுபகாரியங்கள் செய்ய விலக்கி வைக்கிறோம் அல்லவா. அந்த திதிகளையும் சிறப்பிப்பதற்காகவும், எல்லா திதிகளிலும் இறையம்சம் என உணர்த்துவதற்காகவும் நவராத்திரியில் இந்த திதிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். .

  நவராத்திரியில் வரும் நவமி நாள் ஆயுத பூஜை என்றும் சரஸ்வதி பூஜை என்றும் கொண்டாடப்படுகிறது. மாணவர்கள் புத்தகங்கள், நோட்டு, பேனா, பென்சில் முதலானவற்றை வைத்து வணங்குவார்கள். கடைகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என்று சகல துறைகளில் இருப்பவர்களும் ஆயுத பூஜையை விமரிசையாகக் கொண்டாடுவார்கள்.

  நவராத்திரியில் வரும் தசமி நாள் விஜயதசமி!  இந்த நாளில் தொடங்கப்படுகிற எந்தச் செயலும் வெற்றிகரமாக முடியும் என்பது ஐதீகம். இந்த நாளில் ஞானம், வித்தை மற்றும்  கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியை வணங்குவதால் எல்லா வளமும், நலமும் உரமும் கிடைத்து சகல கலைகளிலும் சிறந்து திகழலம்; பேரும்புகழுடன் வாழலாம் என்பது ஐதீகம்!

 மேலும் இந்தநாளில் கல்வி கற்கவும், புது கணக்கு ஆரம்பிக்கவும், முக்கிய பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் இடுவதற்கும் கலைகள் விருத்தியடையவும் வழிபடுவது மிகவும் உன்னதமானது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close