[X] Close

மூக்கின் வழியாக சுவாசிப்பது ஏன் முக்கியம்?


why-is-it-important-to-breathe-through-nose

  • kamadenu
  • Posted: 25 Oct, 2018 13:06 pm
  • அ+ அ-

மூக்கின் மூலமாக சுவாசிப்பது நினைவாற்றலை பலப்படுத்தும் என உங்களுக்குத் தெரியுமா? புதிய ஆய்வு ஒன்றில் இது தெரியவந்துள்ளது.

நரம்பியல் மருத்துவ இதழ் ஒன்றில் இந்த ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. சுவாசத்துக்கும், மனித உணர்வு மற்றும் அறிவாற்றலுக்கும் தொடர்பு உள்ளது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இதற்கு முன், விலங்குகள் மற்றும் மனிதர்களை வைத்து நடந்த பல்வேறு ஆய்வுகளின் தொடர்ச்சியாக, இந்த ஆய்வும் பார்க்கப்படுகிறது.

வாயால் சுவாசிப்பவர்களை விட, மூக்கால் சுவாசிப்பவர்களால் பல்வேறு வாசனைகளை எளிதில் அடையாளம் காண முடிந்தது. இந்த ஆய்வில் மூளையின் செயல்பாடு கண்காணிக்கப்படவில்லை என்றாலும்,  மூக்கால் சுவாசிப்பது உணர்வு மற்றும் நினைவாற்றல் இரண்டுக்கும் இடையேயான தொடர்பை சீராக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஏனென்றால் ஒரு சம்பவம் திரும்பத் திரும்ப நினைக்கப்பட்டே அது ஞாபகமாக வலுபெறுகிறது. 

- ஏ.என்.ஐ
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close