[X] Close

ஒவ்வொரு 20 நிமிடங்களும் நகர்வது இதய நோயாளிகளுக்கு நல்லது


moving-every-20-minutes-can-help-heart-patients-prolong-life

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 23 Oct, 2018 16:44 pm
  • அ+ அ-

இதய நோயாளிகள் ஒவ்வொரு 20 நிமிடங்களும் எழுந்து நகர்ந்தால் தங்கள் ஆரோக்கியத்தை பேணி, வாழ்நாளை நீட்டிக்க முடியும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து, படுத்து அல்லது தொலைக்காட்சி பார்ப்பவர்களுக்கு இதய நோய் வருகிறது. உடல் உழைப்பின்றி இருப்பதால் வாழ்நாள் குறையும் என்று முந்தைய ஆய்வுகளில் தெரியவந்தது. அவ்வபோது இடைவேளி எடுத்துக் கொண்டு நகர்வதன் மூலம் இந்த ஆபத்தைக் குறைத்துக் கொள்ளலாம். 770 கலோரி வரை ஒரு நாளில் வெளியேற வேண்டும்.

இதய நோயாளிகள் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, 7 நிமிடங்கள் உடலுக்கு வேலை தரவேண்டும். எழுந்து நிற்பது, மெதுவாக நடப்பதே கூட ஒரு நாளைக்கு 770 கலோரிகளை எரிக்க உதவும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இது ஒரு சிறிய குழுவை வைத்து நடத்தப்பட்ட ஆய்வே. இந்த பரிந்துரைகளை இறுதி செய்ய இன்னும் விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும். எது எப்படியோ, தினசரி உடற்பயிற்சியே ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வழி. அதற்கு இதய நோய் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close