[X] Close

வருமானத்துக்கும், பக்கவாதத்துக்கும் தொடர்பு உள்ளது: புதிய ஆய்வில் தகவல்


your-income-may-impact-your-stroke-level

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 20 Oct, 2018 16:27 pm
  • அ+ அ-

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் பெரும்பான்மையினரைக் கொண்ட நாடுகளில், ஏன் பக்கவாத நோய் அதிக அளவில் காணப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? புதிய ஆய்வு ஒன்று இதற்கு பதிலளித்துள்ளது. 

சர்வதேச ஸ்ட்ரோக் காங்கிரஸில் நடத்தப்பட்ட ஆய்வில், உலகளவில், பக்கவாத நோயால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவிதம் பேர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களே. ஆனால் அதை எதிர்கொள்ள மொத்தம் 20 சதவித வழிமுறைகளே அவர்களிடம் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. 

முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகுதல், மேலும் உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றின் விகிதம் அதிகமாதலால் பக்கவாத பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. அதிக வருமானம் கொண்ட நாடுகளை விட குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் சராசரியை விட 15 வருடங்களுக்கு முன்பாகவே பக்கவாத நோய் மக்களை பாதிக்கிறது. மேலும் இதில் பாதிக்கப்படுவதில், ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கையே அதிகம்.

- ஏ.என்.ஐ

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close