[X] Close

அன்று - உடல் பருமனால் அவமானம், இன்று - பாடி பில்டிங்கில் பதக்கம்: தமிழகப் பெண்ணின் நம்பிக்கைக் கதை 


ruby-beauty-body-builder

ஜிம்மில் பயிற்சி எடுக்கும் ரூபி | படம்: ஏ.என்.ஐ

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 25 Sep, 2018 13:03 pm
  • அ+ அ-

உடல் பருமன் காரணமாக பலரால் அவமதிக்கப்பட்டவர் இன்று உடல் எடை குறைத்து பாடி பில்டிங்கில் பதக்கங்களைப் பெற்று வருகிறார். 

சென்னையைச் சேர்ந்த ரூபி பியூட்டி ஆறு வயது மகனின் தாய். உடல் எடை அதிகமானதால் பல இன்னல்களுக்கு ஆளானார். அவரது கணவரே அவரை விட்டுச் சென்றார். ஆனால் இதனால் ரூபி மனமுடையவில்லை. இதற்கு பதிலாக உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். பாடி பில்டிங்கில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 

"என் கணவர், என் உடல் பருமன் காரணமாக என் மீது ஆர்வம் குறைந்துவிட்டது என்று கூறினார். அப்போதுதான் எனது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பது எனக்குப் புரிந்தது. பிறகு நடைபயிற்சி செய்ய ஆரம்பித்து உடல் எடை குறைத்தேன். மகன் பிறந்த பிறகு பயிற்சி செய்வது இன்னும் கடினமாக மாறியது. ஆனால் எனது குறிக்கோளில் உறுதியாக இருந்ததால் என்னால் அதை செய்ய முடிந்தது. 

பொருளாதார ரீதியாகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால் விலை அதிகமான உணவுகளை, மருந்தை சாப்பிட வேண்டியிருந்தது. ஆனால் ஜும்பா வகுப்புகள் மூலமாக சமாளித்தேன். அசாமில் தேசிய அளவிலான பாடிபில்டிங் போட்டியில் பதக்கம் வென்றிருக்கிறேன். மிஸ். சென்னை போட்டியிலும் வென்றேன். மாநில அரசு எனது வளர்ச்சிக்கு உதவ வேண்டும். நான் என்னை நிரூபித்துவிட்டேன். பெண்களால் இதைச் செய்ய முடியும் என்று காட்ட வேண்டும். நம் மாநிலத்திலிருந்து இதைச் செய்ய இன்றுவரை யாரும் இல்லை" என்கிறார் ரூபி.  

ரூபியின் பயிற்சியாளர் கார்த்திக் பேசுகையில், "நான் 100 பெண்களுக்கு மேல் பயிற்சி அளித்திருக்கிறேன். ஒரு சில மாதங்களிலேயே (பாடி பில்டிங்கில்) ஆர்வம் இழந்துவிடுவார்கள். ஆனால் ரூபிக்கு மன உறுதி இருந்தது. அவருக்காக நான் ஒரு வருடம் என்று கால அளவை நிர்ணயித்திருந்தேன். ஆனால் அவர் ஆறு மாதங்களிலேயே நினைத்ததை எட்டிவிட்டார். மிஸ் இந்தியா போட்டியில் ஃபிட்னஸ் பிரிவில் கண்டிப்பாக அவர் எளிதில் வெற்றி பெறுவார் " என்றார். 

உடல் தோற்றத்தை வைத்து ஏளனம் செய்வது சமூகத்திலும் சரி, சமூக வலைதளங்களிலும் சரி, அதிகமாகவே உள்ளது. இது இளம் ஆண், பெண்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட சூழலில் ரூபியின் கதை, நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது.

- ஏ.என்.ஐ

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close