[X] Close

மேலும் 8 நகரங்களில் ஸ்விக்கி (Swiggy) சேவை ஆரம்பம்!


swiggy-launches-in-new-cities

  • kamadenu
  • Posted: 25 Sep, 2018 11:31 am
  • அ+ அ-

உணவு விநியோக சேவை நிறுவனமான ஸ்விக்கி மேலும் 8 புதிய நகரங்களில் தனது சேவையை விரிவுப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த 8 நகரங்களிலும் அதிக அளவிலான வாடிக்கையாளர்களையும் கவர திட்டமிட்டுள்ளது.

டேராடூன், பாண்டிச்சேரி, மைசூர், விஜயவாடா, நாசிக், கவுஹாத்தி, கான்பூர், லூதியானா உள்ளிட்ட 8 நகரங்களில் ஸ்விக்கி தனது சேவையை விரிவுப்படுத்து திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஸ்விக்கி நிறுவனத்தின் முதன்மை அலுவலர் விவேக் சுந்தர் கூறுகையில், "உணவு விநியோக சேவையில் ஸ்விக்கி இந்தியாவில் முக்கிய பங்காற்றி வருகிறது. புதிய நகரங்களில் ஆரம்பிக்கப்படுவதற்க்கு முன்பாகவே  ஸ்விக்கி செயலியை அங்கிருக்கும் ஆயிரக்கணக்கானோர் தரவிறக்கம் செய்திருப்பது உத்வேகத்தைத் தருகிறது. இந்த எட்டு புதிய சந்தைகளின் விரிவாக்கம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது” என்று கூறினார்.

கடந்த வருடம் அகமதாபாதில் தொடங்கப்பட்ட ஸ்விக்கி சேவை இந்த வருடம் வடோதரா மற்றும் சூரத்தில் தொடங்கப்படவுள்ளது. ஸ்விக்கி அகமதாபாதில் ஏற்கனவே பிரபலமான சேவையாக உள்ளது. அங்கு சேவை தொடங்கப்படும் முன்னரே, ஸ்விக்கி செயலியை அதிகம் பேர் பதிவிறக்கம் செய்தனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close