[X] Close

ரூ. 10,999க்கு இந்தியாவில் நோக்கியா 5.1 ஸ்மார்ட்போன்


nokia-5-1-sales

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 24 Sep, 2018 17:28 pm
  • அ+ அ-

நோக்கியா மொபைல்களை விற்கும் ஃபின்லாந்து நிறுவனமான ஹெச்.எம்.டி க்ளோபல், நோக்கியா 5.1 மாடல் மொபைல், இந்தியாவில் ரூ.10,999க்கு கிடைக்கும் என அறிவித்துள்ளது.

இணையத்தில் மட்டுமே விற்பனைக்கு வரும் இந்த மொபைல், ஃபிளிப்கார்ட் மற்றும் நோக்கியா தளங்களில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் கிடைக்கும். செயற்கை நுண்ணறிவுத் திறனுடன் உருவாகியுள்ள இந்த மொபைலில் 5.8 இன்ச் அகல் திரையும், கண்ணாடி உடலும், 13 மெகாபிக்சல் + 5 மெகாபிக்சல் இரண்டு லென்ஸ் கேமராவும் உள்ளன.

3ஜிபி மற்றும் 4ஜிபி ராம் என இரண்டு விதமாகக் கிடைக்கும் இதன் மெமரி 64 ஜிபி. பேட்டரி திறன் 3060 எம்.ஏ.ஹெச். ஆண்ட்ராய்ட் ஓரியோவுடம் வரும் இந்த மொபைலை ஆண்ட்ராய்ட் பி பதிப்புக்கு அப்டேட் செய்து கொள்ளலாம்.

"நோக்கியா 5.1 ப்ளஸ் மொபைலுடன், நல்ல செயல்திறன் கொண்ட, செயற்கை நுண்ணறிவு வசதியுள்ள, நவீன வடிவத்தில் ஒரு மொபைலை உருவாக்குவதே எங்கள் நோக்கம். இதனால் அதிகமானோர் மொபைல் கேம்ஸ், தங்களுக்குப் பிடித்த தொடரை அடுத்தடுத்து பார்த்தல், நல்ல புகைப்படம் பிடித்தல் என பயனபடுத்தலாம்" என்று இந்தியப் பிரிவின் துணைத்தலைவர் அஜய் மேத்தா கூறியுள்ளார்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close