[X] Close

ஸ்வைப் செய்தாலே ரிப்ளை, டார்க் மோட்: வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்


whatsapp-dark-mode-update

இது அதிகாரப்பூர்வ புகைப்படமல்ல. ட்விட்டரில் பயனர் ஒருவர் பதிவேற்றிய மாதிரி புகைப்படம்.

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 17 Sep, 2018 18:07 pm
  • அ+ அ-

வலது பக்கம் ஸ்வைப் செய்து ரிப்ளை செய்யும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தவுள்ளது. மேலும் டார்க் மோட் (dark mode) வசதியையும் அறிமுகப்படுத்துகிறது.

கிட்டத்தட்ட ஸ்மார்ட் போன்கள் வைத்திருக்கும் அனைவரும் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலி வாட்ஸ்அப். இதில அவ்வபோது புதிய அப்டேட்டுகள் வந்த வண்ணம் இருக்கும். சமீபத்தில் கூட வாட்ஸ்அப் குழுக்களை (groups) நிர்வகிப்பவருக்குக் கூடுதல் அதிகாரம் கொடுக்கும் வகையில் அப்டேட் ஒன்று வந்தது. மேலும் ஃபார்வர்ட் செய்யப்படும் தகவல்களிலும் சில கட்டுப்பாடுகள் வந்தன.

தற்போது புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப் அறிமுகம் செய்யவுள்ளது. இப்போது இருக்கும் முறைப்படி, வாட்ஸ்அப்பில் மெஸேஜ் வந்தால் நமது மொபைலில் நோடிஃபிகேஷன் வரும். அதை க்ளிக் செய்து, உள்ளே சென்று ரிப்ளை செய்யலாம், அல்லது அந்த மெஸேஜை மெதுவாக கீழே ஸ்வைப் செய்து இழுத்து, அதிலிருக்கும் ரிப்ளை என்ற விருப்பத்தைத் தேர்வு செய்து அப்படியே ரிப்ளை செய்யலாம். பயனர்களுக்கு இதை இன்னும் எளிதாக்கும் விதமாக, மெஸேஜ் நோடிஃபிகேஷன் வந்தவுடன் அதை வலது பக்கம் ஸ்வைப் செய்தாலே ரிப்ளை தருவதற்கான பெட்டி வரும், அதில் டைப் செய்து அனுப்பிவிடலாம்.

இப்போதைக்கு இந்த அப்டேட் ஆப்பிள் ஐஓஎஸ் மொபைல்களில் பயன்பாட்டில் இருக்கிறது. தொடர்ந்து ஆண்ட்ராய்ட் மொபைல்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும்.

அடுத்த அப்டேட் டார்க் மோட். இது, வாட்ஸ்அப் பக்கத்தின் தோற்றத்தை இருண்டதாக மாற்றும். இரவு நேரங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்தும்போது பளிச்சென இருக்கும் பக்கத்தைப் பார்ப்பதை விட டார்க் மோடில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது அது கண் பார்வையை அதிகம் பாதிக்காமல் இருக்கும்.  மேலும், ஓஎல்ஈடி, ஏஎம்ஓஎல்ஈடி ஆகிய டிஸ்ப்ளேவைக் கொண்ட மொபைல்களில் பேட்டரி பயன்பாட்டையும் குறிக்கும். டார்க் மோடில் எல்ஈடி பிக்சல்கள் பயன்பாட்டில் இல்லாமல் கருப்பு மட்டுமே பிரதானமாக இருக்கும்.

இப்போதைக்கு இந்த இரண்டு அப்டேட்டும் பரிசோதனை நிலையிலேயே இருக்கின்றன. விரைவில் இவை பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close