[X] Close
 

5 தலைமுறைகளாக ஒரு சாதனை: கின்னஸ் ரெக்கார்டுக்கு முயற்சிக்கும் குடும்பம்


5

  • Team
  • Posted: 09 Mar, 2018 18:34 pm
  • அ+ அ-

மும்பையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த 5 தலைமுறைகளாக ஆடிட்டர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் குடும்பத்தில் அனைவருமே ஆடிட்டர்கள் என்பதால், கின்னஸ், மற்றும் லிம்கா சாதனை புத்தகத்துக்கும் அனுப்பி உள்ளனர்.

மும்பையைச் சேர்ந்த பிரிஜ் மோகன் சதுர்வேதி என்பவரின் குடும்பமே கடந்த 5 முறைகளாக ஆடிட்டராக பணியாற்றி வருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், பி.எம்.சதுர்விதியின் ரத்த உறவுகள் அனைவரும் தொடர்ந்து இந்த பணியைச் செய்து வருகின்றனர்.

இதில் பிரிஜ் மோகன் சதுர்வேதி மூன்றாவது தலைமுறை ஆடிட்டர். இவரின் மகன் ரிஷ்பா சதுர்வேதி, ஆடிட்டராக தற்போது பணியாற்றி வருகிறார். ரிஷ்பா சதுர்வேதியின் மகள் மோகினி சதுர்வேதி சமீபத்தில் சிஏ. தேர்ச்சி பெற்று அடுத்த ஆடிட்டர் பணிக்கு தயாராகிவிட்டார்.

பிரிஜ் மோகன் சதுர்வேதியின் தாத்தா பிஷம்பர் நாத் சதுர்வேதி சமஸ்கிருதத்தில் பட்டம் பெற்று லண்டனில் 1925-ம் ஆண்டு சிஏ படிப்பு முடித்தவர். அதன்பின் டெல்லியில் வந்து ஆடிட்டாரகப் பணியாற்றினார். பிஷம்பர் நாத் சதுர்வேதியின் மகன்கள் அமர்நாத் மற்றும் தினா நாத் ஆகியோரும் 1955ம் ஆண்டு சிஏ பட்டம் பெற்று ஆடிட்டர்களாக பணியாற்றினர்.

இதில் அமர்நாத் சதுர்வேதியின் மகன் பிஎம். சதுர்வேதி கடந்த 1976ம் ஆண்டில் இருந்து ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவரின் சகோதரர்கள் மதன்மோகன், சுபோத் ஆகியோரும் ஆடிட்டர்களாக இருந்து வருகின்றனர். மதன்மோகனின் மகன்கள் அபூர்வா, ரிஷாபா ஆகியோரும் சிஏ பட்டப்படிப்பு முடித்து கடந்த 2006ம்ஆண்டில் இருந்து ஆடிட்டர்களாக இருந்து வருகின்றனர்.

இது குறித்து தற்போது உயிரோடு இருக்கும் பி.எம்.சதுர்வேதி கூறுகையில், “இந்த உலகிலேயே தொடர்ந்து 5 முறைகளாக ஆடிட்டர்களாக பணியாற்றி வரும் குடும்பம், ரத்த உறவுகள் நாங்கள்தான். எங்கள் குடும்பத்தில் 5-வது தலைமுறையாக எனது பேத்தி மோகினி சமீபத்தில் சிஏ முடித்து ஆடிட்டராக பணி செய்ய தயாராகியுள்ளார்.

இதற்காக நான் உலக கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பம் செய்துள்ளோம். மேலும், அமெரிக்காவில் உள்ள அமெரிக்கன் இன்ஸ்ட்டியூட் ஆப் சிபிஏ மற்றும் இங்கிலாந்து வேல்ஸ் சிஏ அமைப்பு ஆகியவற்றிடமும் அங்கீகாரம் கேட்டு மனுச்செய்து இருக்கிறோம் எனத் தெரிவித்தார்.

படவிளக்கம் - பிரிஜ் மோகன் சதுர்வேதி, அவரின் மகன் ரிஷாப் சதுர்வேதி, ரிஷாப் சதுர்வேதியின் மகள் மோகினி சதுர்வேதி ஆகியோர் உள்ளனர்.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close