[X] Close

நேற்று ப்ரியா பவானி சங்கர் இன்று சாக்‌ஷி தோனி


sakshi-dhoni-trolled-for-inappropriate-dress

  • பாரதி ஆனந்த்
  • Posted: 31 Jul, 2018 13:00 pm
  • அ+ அ-

நடிகை ப்ரியா பவானி சங்கர் அணிந்த ட்ரான்ஸ்பரன்ட் ஆடை குறித்து நெட்டிசன்கள் பதிவிட்ட கருத்துகளும் அதற்கு அவர் பதிலடி கொடுத்ததும் நடந்து 2 நாட்கள்தான் ஆகின்றன. அதற்குள் நெட்டுலகில் சுற்றும் கலாச்சாரக் காவலர்கள் சாக்‌ஷி தோனியை வம்புக்கு இழுத்து ட்ரோல் செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்‌ஷி தோனியின் அண்மையில் தனது தோழி பூர்ணா படேலின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் மணிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த லெஹங்காவை அணிந்திருந்தார். அவரது மேலாடையில் தோல் நிறத்திலேயே உள்துணி இருந்ததால் சாக்‌ஷியை நெட்டிசன்கள் விமர்சிக்கத் தொடங்கினர்.

உங்களுக்கு சற்றும் ஆடை அலங்கார சிந்தனை இல்லை..

ஒரு பிரபலத்தின் மனைவி நீங்கள் இப்படி உடை அணியலாமா?

தோனி.. நீங்கள் எப்படி உங்கள் மனைவி இத்தகைய ஆடைகளை அணிய அனுமதிக்கிறீர்கள்?

ஒரு பிரபலரின் மனைவியாக இருந்து கொண்டு இப்படி உடை அணியலாமா? நமக்கென்று ஒரு கலாச்சாரம் இருக்கிறது.


இதே தொனியில் கருத்துகள் குவிந்துவந்த நிலையில் சாக்‌ஷி ஆதரவாகக் கருத்திட்ட ஒருவர், "உங்களது குறுகலான சிந்தனைதான் மோசமாக உள்ளதே தவிர சாக்‌ஷியின் உடையலங்காரம் அல்ல. அவர் அழகாக இருக்கிறார்" எனப் பதிவிட்டார்.
முன்னதாக நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பிரியா பவானி சங்கரும், "என் புகைப்படத்தில் எதுவும் தவறாகத் தெரியவில்லை. இந்தப் படத்தைப் பெரிதாக்கிப் பார்த்து, அபத்தமாக பேசி, மற்றவர்களைப் பற்றி முன் தீர்மானத்தோடு பேசும் உங்களைப் போன்றவர்கள் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிப்பதாக ஆகிவிடுமா? மரியாதையுடன், சத்தமாகக் கூறுகிறேன் கேளுங்கள். உங்களது கலாச்சாரத்தை பாதிக்கும்படி எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 

எனது இந்த 1.5 இன்ச் வெளிப்படையான ஆடையைப் பற்றி கவலைப்படும் இந்த கமெண்டுகளைப் படிப்பதை விட எளிதாக எனது பண்புகளை நானே கையாள முடியும். மிக்க நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close