[X] Close

தேங்காய் சுடற நோம்பி தெரியுமா உங்களுக்கு?


interesting-facebook-post

  • பாரதி ஆனந்த்
  • Posted: 17 Jul, 2018 15:59 pm
  • அ+ அ-

ஃபேஸ்புக்கில் உலாவரும்போது சில நேரங்களில் சில சுவாரஸ்யமான தகவல்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. எனது முகநூல் நட்பு வட்டத்தில் இருக்கும் சக்தி கிரியின் பதிவு அப்படித்தான் சுவாரஸ்யம் நிரம்பியதாக இருந்தது.

அவரது பதிவு..


இன்று ஆடிமாதம் முதல்தேதி...எங்க ஊரு பக்கம்லாம் தேங்காய் சுடற நோம்பின்னு சொல்வோம். எவ்ளோ பேர்க்கு இந்தப் பழக்கம் இருக்குன்னு தெரியல...
முன்னாடிலாம் மாசம் பொறக்க நாலுநாள் முன்னாடியே தேங்காய் வாங்கி கொடுத்துடுவாங்க வீட்ல. ஸ்கூல் விட்டு வந்ததும் அதை பாறைக்கல்லுல போட்டு தேய்ச்சு
தேய்ச்சு மொழுமொழுன்னு பண்ணிவைப்போம். இப்போ எல்லாமே நாங்க பண்ணிவச்சா புள்ளைங்க சுடறதுக்கு வந்து நிக்கறதோட சரி...
நல்லா தேங்காய தேச்சு வச்சதுக்கு அப்புறம் அதோட ஒரு கண்ணணுல துளையிட்டு உள்ள இருக்க தேங்காய்த்தண்ணிய ஒரு கப்ல ஊத்தி வச்சுட்டு தேங்காய்க்கு உள்ளாற
எள், கடலை, வெல்லம், அவல், பாசிப்பயறு, ஏலக்காய், பச்சரிசி எல்லாத்தையும் போட்டு அது வேகறதுக்காக தேங்காய்த்தண்ணிய உள்ளயே ஊத்திடுவோம்.
அந்தத் தேங்காயை அழிஞ்சி மர குச்சியில் செருகி வெளிப்பக்கம் மஞ்சள் பூசி வீட்டுக்குப் பக்கத்துல எல்லோரும் ஒண்ணா சேர்ந்து நெருப்பு மூட்டி நெருப்புல தேங்காயைச்
சுடுவோம். தீயில் கருகித் தேங்காய் நல்லா வெந்ததும் சுட்ட தேங்காயை குச்சியோட கொண்டுபோய் பிள்ளையார் கோவில்ல உடைச்சு எல்லார்க்கும் குடுத்துட்டு
சாப்பிடுவோம்..
உள்ளே வைச்ச கலவை வெந்து தனி ருசியாக இருக்கும். தேங்காயில் உள்பக்க நாட்டு சர்க்கரையின் இனிப்பும் ஏறி சுட்ட தேங்காயின் மணத்துடன் ருசியாக இருக்கும்.
அவ்ளோ சீக்கிரம் நெருப்பு பிடிக்காது அழிஞ்சி மர குச்சி. ரொம்பநாளைக்கு அந்தக் குச்சி வீட்ல ஒரு பக்கமா இருக்கும்.
மகாபாரதப்போர் ஆடி ஒன்னாம் தேதி துவங்கி ஆடி பதினெட்டாம் நாள் முடிஞ்சதுன்ற அடிப்படைல இதை இங்க பண்றதா சொல்வாங்க. நமக்கு வருசத்துல ஒருநாள்தான்
இந்த டேஸ்ட்ல தேங்காய சாப்பிட முடியும்கிறதுதான் இப்போதைக்கு முக்கியமாக்கும்..

இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

ஆடி மாதத் துவக்கத்திலேயே அந்த மாதத்தில் அனுசரிக்கப்படும் ஒரு விரதம் குறித்து ஃபேஸ்புக் வாயிலாக தெரிந்து கொள்ள முடிந்ததில் மகிழ்ச்சியே. இன்றைய இணைய நாள் இனிய நாள்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close