[X] Close

சமையலும் கலையே..! பாராட்டுவோம்!   


samayal-kalai

  • வி.ராம்ஜி
  • Posted: 08 Jul, 2018 12:16 pm
  • அ+ அ-

  சமையல் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொண்டதோ அதைவிட சமையலறை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்கவேண்டும் என்பது ரொம்ப ரொம்ப முக்கியம்! 
   ஏராளமானோருக்கு சமைக்கும் சமையற்கூடங்கள், அதாவது கிச்சன்கள் இன்னும் கூடுதல் கவனத்துக்கு உரியதாக இருக்கவேண்டும். 
  பல கிச்சன்களில்... பின்பற்றவேண்டிய விதிமுறைகள் அச்சிடப்பட்டு மாட்டப்பட்டிருக்கும். சில உணவுக்கூடங்களில் விதிமுறைகள் என்று தனியாக வரையறுக்கப்படாமல் உணவுக்கூடத்தின் ஒழுங்கு என்பது பணியாளர்களின் புரிந்துணர்வின் மூலமாகவே சிறப்பாக பின்பற்றப்படும்.
   அனுபவத்தின் மூலமாக தாம் கற்ற விதிகளை தாமாக முன்வந்து பின்பற்றும் உணவுக்கூடம் கூடுதல் சுவையுடன் உணவை உற்பத்திச் செய்கிறது. 
  ஆரம்பநிலையில் உள்ள சமையல் கலைஞர்கள் அதாவது பெரிய அனுபவத்துக்குத் தயாராகும் சமையல் கலைஞர்கள் மற்றும் தொழில்முறை உணவுக்கூடங்களில் முதன்முறையாக பணிபுரிபவர்ளுக்கு இந்த விதிகள் ஆரம்பத்தில் சற்று கடினமாகத்தான் இருக்கும். ஆனால் நாளடைவில் இவையெல்லாம் பழக்கத்துக்கு வந்து இயல்பாகிவிடும்! 
  சமையல் என்பது சாதாரண விஷயமல்ல. வெறும் உப்பு புளி மிளகாய் சமாச்சாரம் மட்டுமே அல்ல. இது ருசிக்கவும் ரசிக்கவுமான சுவையான விஷயம். நமது சமையல் பல்லாயிரக்கணக்கான மனிதர்களால் சாப்பிடப்படுகிறது. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான முறை விமர்சனத்துக்குள்ளாகவும் செய்கிறது. 
  பல்வேறு மனிதர்கள் பலவாறாக விமர்சித்து உணவை மதிப்பிடுவார்கள். அந்த விமர்சனங்கள் சமையல்கலைக்கு கிரிடம் சூட்டுவதாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான், உணவு தயாரிப்பதில் ஏராளமான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. 
  உணவின் சுவையையும் தரத்தையும் மேம்படுத்தவே விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்பதை என்பதை மனதில் கொள்ளவேண்டும். அவை பணியாளர்களால் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும். அப்படிப் பின்பற்றப்பட்டால்... பணியாளர்களுக்கும் கௌரவம். உணவும் ருசிக்கும்! 
  ஒவ்வொரு அரிசியிலும் நம் பெயர் எழுதியிருக்கிறது என்பார்கள். அதேபோல், ஒவ்வொரு பதார்த்தத்திலும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வு பொதிந்திருக்க வேண்டும். வீட்டம்மாவின் கையும் மனசும் இணைந்திருக்கவேண்டும். 
 ஒவ்வொரு சிறு உணவின்மீதும் முழுமையான ஈடுபாட்டைச் செலுத்தவேண்டும். ஒவ்வொரு சிறு பலகாரமும் கூட, சமையல் கலைஞர்களின் கூட்டுப் பொறுப்பிலும் கடும் உழைப்பிலும்  அவர்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் விதமாகவும், ஆத்மார்த்த செயல்பாடுகளால் சமைக்கப்படுகின்றன. 
  ஆத்மார்த்தமாக சமைப்பது முக்கியம். அதை ருசித்தும் ரசித்தும் சாப்பிடுவது அதைவிட முக்கியம். எல்லாவற்றுக்கும் மேலாக சாப்பிட்ட உணவு குறித்து, மனதாரப் பாராட்டப்பட வேண்டும் என்பது ரொம்ப ரொம்ப முக்கியம்.
  எல்லோரும் பாராட்டுக்கு ஏங்குகிறோம். ஆனால் யாரும் யாரையும் மனதாரப் பாராட்டிக் கொள்வதில்லை. வீட்டிலோ வெளியிலோ... எங்கு சாப்பிட்டாலும் அந்த உணவு தயாரித்தவரை கொஞ்சம் பாராட்டிப் பாருங்கள். அந்த சர்டிபிகேட்... சமையல் செய்பவர்களுக்கு உற்சாக டானிக்! 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close