[X] Close

மெஸ்ஸி அடித்த கோலால் மலபார் மக்கள் நிம்மதி: ஏன், எப்படி?


when-messi-brought-smile-back-on-malabar-s-face

கோழிக்கோடில் அர்ஜென்டினா ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ள போர்ட்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 28 Jun, 2018 17:09 pm
  • அ+ அ-

செவ்வாய்க்கிழமை இரவு 11.45 மணிக்கு, மலபார் பகுதியில் நீங்கள் இருந்திருந்தால், அங்கிருக்கும் வீடுகளில் ஒருவிதமான நிம்மதி பரவுவதை கவனித்திருக்க முடியும். காரணம்?

மெஸ்ஸி கோல் அடித்துவிட்டார். உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினாவுக்கான கதவுகள் இன்னும் மூடப்படவில்லை என்பதே. 

உலகக்கோப்பையின் துவக்கத்தில் அர்ஜென்டினாவின், குறிப்பாக மெஸ்ஸியின் சுமாரான ஆட்டம் பெரும் வருத்தத்தைத் தருவதாகவே ரசிகர்களுக்கு இருந்தது. ஏகப்பட்ட மீம்கள் உருவாக்கப்பட்டன, முக்கியமாக ஐஸ்லாந்துக்கு எதிராக மெஸ்ஸி பெனால்டி தவறவிட்டதற்குப் பிறகு சமூக வலைதளங்களில் பல நகைச்சுவை துணுக்குகள் பகிரப்படன. 

மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளில் பரவிய முக்கியமான செய்தி என்னெவென்றால், அந்தப் பகுதி முழுவதும் ரசிகர்களால் வைக்கப்பட்டிருக்கும் ஃப்ளெக்ஸ் போர்டுகளை செவ்வாய்க்கிழமை இரவே எடுக்க வேண்டிவரும் என்பதே.

ஏனென்றால் அர்ஜென்டினா இந்தப் போட்டியில் எப்படியும் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறிவிடும் என்றே கருதினார்கள். (அதில சில போர்டுகளில் மெஸ்ஸி, கேரளாவின் பிரபல உடையான முண்டோடு நின்று கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)

ஒருவர் மெஸ்ஸியின் முகத்தை அழகிப் போட்டி போட்டியாளரைப் போல ஃபோட்டோஷாப்பில் வடிவமைத்து, மிஸ் பெனால்டி பட்டம் பெறுபவர் என்று வர்ணித்திருந்தார். இன்னொரு ஃபோட்டோஷாப் படம், மெஸ்ஸி, காலபந்து மைதானம் அளவுக்கு மிகப்பெரிய கோல் போஸ்ட் முன் பெனால்டி கிக் எடுப்பது போல மாற்றியமைக்கப்பட்டிருந்தது. 

குரோஷியாவுக்கு எதிராக அர்ஜென்டினா தோற்றதால் கோட்டயம் பகுதியில் ஒரு இளைஞர் தற்கொலை செய்துகொண்டதும் நடந்தது. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக அர்ஜென்டினா ரசிகர்களின் வாழ்க்கை சற்று கடினமாகத்தான் இருந்தது.

"நைஜீரியாவுக்கு எதிராக மெஸ்ஸி அந்த கோலை அடிக்கும் வரை நாங்கள் அனைவரும் உற்சாகமின்றிதான் இருந்தோம். மலப்புரம் பகுதியில் வேறெந்த அணிக்கும் இவ்வளவு ரசிகர்கள் இருப்பார்களா என்று தெரியவில்லை. எனது தலைமுறையே, மரடோனா அர்ஜென்டினாவை உலகக்கோப்பை வெற்றிக்கு வழிநடத்துவதைப் பார்த்து வளர்ந்த தலைமுறை. நாங்கள் அனைவருமே அர்ஜென்டினா அணி ரசிகர்கள்" என்கிறார் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த தீவிர ரசிகர் ஷௌகத். 

இரவு 2 மணிக்கு, 100க்கும் அதிகமான ரசிகர்கள் தங்கள் பைக்குகளில் வலம் வந்து, அர்ஜென்டினாவின் இந்த வெற்றியை கொண்டாடினர். அந்த தாமதமான இரவுப் பொழுதோ, மழையோ அவர்கள் கொண்டாட்டத்தை பாதிக்கவில்லை. மெஸ்ஸி அடித்த கோல் அவர்களுக்கு நிம்மதியைத் தந்துவிட்டதே. அது போதாதா? 

- பி.கே.அஜித்குமார் (தி இந்து ஆங்கிலம்) | தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close