[X] Close

50 வயதிலும் காதல் வரும்: மகிழ்ச்சியாக வாழும் நபரின் நெகிழ்ச்சிப் பதிவு


this-man-s-story-of-finding-love-30-years-after-his-wife-s-death-will-make-you-believe-in-fate

  • kamadenu
  • Posted: 07 Jun, 2018 17:17 pm
  • அ+ அ-

நம் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை நாம் கணிக்கவே முடியாது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். 

அப்படி தன் மனைவியின் இறப்புக்குப் பின் கிட்டத்தட்ட 50 வயதில் புதிய காதலை தேடி மகிழ்ச்சியாக இருக்கும் ஒருவரின் வாழ்க்கை குறித்த பதிவு ‘ஹ்யூமன்ஸ் ஆஃப் பாம்பே’ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. 

அவருடைய பதிவின் தமிழாக்கம் இதோ:

“என் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். நான் என் 30 வயதுகளில் இருக்கும்போதே மனைவியை இழந்து விட்டேன். அதன்பிறகு என்னுடைய இரண்டு அழகிய மகள்கள், அவர்களின் படிப்பு, நான் அவர்களுக்கு தாயாகவும் தந்தையாகவும் நடந்து கொள்கிறேனா என்பதை உறுதி செய்துகொள்வது, இவைதான் என் வாழ்க்கையாக இருந்தது. மகள்கள் தான் என்னுடைய வாழ்க்கை என்பதிலும், இனிமேல் நான் மற்றொரு காதலை அடைய போவதில்லை என்பதிலும் நான் மகிழ்ச்சியாகவே இருந்தேன்.

ஆனால், வாழ்க்கை உங்களை ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கும். நீங்கள் எதிர்பாராதது எல்லாம் நடக்கும். எனக்கு 49 வயதாகும் போது நான் அவளை பார்த்தேன். அவளுடைய கணவரும் இறந்து விட்டார். எங்களின் வாழ்க்கைத் துணைகளின் இழப்பின்பால் நாங்கள் இருவரும் கூடுதல் அன்பு செலுத்தினோம். அவளும் தன் இளம் வயதிலேயே கணவரை இழந்திருக்கிறாள்.

அந்த வலி அதனை கடந்து வந்தவர்களுக்கு மட்டுமே புரியும். மிக எளிமையாக நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். ஒருவருடன் ஒருவர் பொருந்தினோம். அதனால், எங்கள் இருவரின் குடும்பங்களின் ஆசீர்வாதத்துடன் கோவிலில் மிக எளிமையாக திருமணம் செய்துகொண்டோம்.

இப்போது எனக்கு 60 வயதாகிறது. எங்களுக்கு 8 வயதில் மகன் இருக்கிறான். நான் அவனுடைய தாத்தாவாக இருக்கும் வயதில் இருக்கிறேன் என்பது எனக்கு தெரியும். ஆனால், இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன்.  என் மகள்களும் அவனிடத்தில் அதிக அன்பு செலுத்துகின்றனர். இது மகிழ்ச்சியான வாழ்க்கை. என் மூத்த மகள் பத்திரிகையாளராக இருக்கிறார். இளைய மகள் கணினி பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறார். நான் ஒரு பெருமையான தந்தை மற்றும் மகிழ்ச்சியான கணவர். இந்த 60 வயதில் தான் என் வாழ்க்கை தொடங்கியிருப்பதாக நினைக்கிறேன்”.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close