[X] Close

பிரசவத்தை முதன்முறையாக பார்த்த மருத்துவ மாணவரின் நெகிழ்ச்சிப் பதிவு


pakistani-man-s-post-for-women-after-watching-a-baby-being-born

  • kamadenu
  • Posted: 18 May, 2018 17:36 pm
  • அ+ அ-

தாய்க்கும் குழந்தைக்குமான தொடர்பு அந்த தாய் கருவுற்ற சமயத்திலேயே தொடங்கிவிடுகிறது என கூறுவர். கருவுற்ற கணத்திலிருந்து குழந்தை நலமாக பிறக்க வேண்டும் என்பதற்காக, தன் உடலளவிலும், மனதளவிலும் தங்கள் சக்தியை மீறி பெண்கள் பிரயத்தனப்படுவார்கள். குழந்தை பேற்றை தியாகத்துடன் ஒப்பிட்டு பலரும் பேசுவர். ஆனால், பிரசவத்தை நேரில் பார்த்தவர்களுக்குத் தான் அந்த வலியில் பாதியையாவது உணர முடியும்.

பாகிஸ்தானை சேர்ந்த 4-ம் ஆண்டு மருத்துவ மாணவர் ஷபீர் முஸ்தஃபா என்பவர், முதன்முறையாக குழந்தை பிறப்பை பார்த்த அனுபவத்தையும், அதனால் தான் அனுபவித்த வலியையும் நெகிழ்ச்சியுடன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அச்சம்பவத்திற்கு பிறகு பெண்கள் மீதான மரியாதையும் கூடியுள்ளதாக அவர் அந்த பதிவில் எழுதியுள்ளார்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அவரது முகநூல் பதிவின் தமிழாக்கம் இதோ:

"நான் முதன்முறையாக சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பதை நேரடியாக பார்த்தேன். உண்மையிலேயே அதன் பிறகு எனக்கு பெண்கள் மீது அதிக மரியாதை ஏற்பட்டது. குழந்தை பிறப்பு குறித்து எவ்வளவோ அதிசயங்களை நான் படித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். ஆனால், அவற்றை விட நேரில் பார்த்தது அதுவொரு மிக புனிதமான தருணமாக இருந்தது. பிரசவத்தை நேரில் பார்ப்பது என்னை தனிப்பட்ட அளவில் பாதிக்கும் என நான் முன்பு நினைத்திருந்ததில்லை. குழந்தை பிறப்பின் போது பெண்கள் அதன் வலியை தாக்குப் பிடிக்கும் திறனைக் கண்டு எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.

வழக்கமாக சிசேரியன் செய்யப்படும்போது பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படும். ஆனாலும், அவர்கள் பாதியில் நினைவு திரும்பிவிடுவார்கள். குழந்தை பிறந்து விட்டது என தெரிந்த அடுத்த கணமே, வலி, உணர்வின்மை, அசாதாரண நிலை, பிரசவ வேதனை , சோர்வு எல்லாவற்றையும் தாண்டி, தங்கள் குழந்தை நலமுடன் இருக்கிறதா என்ற கேள்வி மட்டும் தான் அவர்களின் மனதில் தோன்றும்.

முதன்முறையாக பிரசவத்தை நேரில் பார்த்தபோது, குழந்தை பெற்றெடுத்த அப்பெண் வலியால் பாதி உறங்கிய நிலையில் இருந்தும், வலியை மறந்து என் பக்கம் திரும்பி, "என் குழந்தை நலமாக இருக்கிறதா?” என்ற கேள்வியைத் தான் கேட்டார்.

எனக்கு அழுகையே வந்து விட்டது. அதனை மறைக்க நான் வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன். அதன்பின், அப்பெண்ணிடம் குழந்தை நலமாக இருப்பதை தெரிவித்தேன்.
பெண்கள் எல்லோரும் அந்த வலியை இயல்பாக அனுபவிப்பதாகவும், அதை தாங்கிக் கொள்வதென்பது ஒரு அதிசயம் என்பதைப் போலவும் தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். 
பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களிடம் அவர்கள் பேச விரும்புவதை கேட்க நாம் காது கொடுக்க வேண்டும்”.

 

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close