[X] Close

ஆண்களுக்கு மன அழுத்தம் இருந்தால் மனைவிக்கு கருவுறுதல் வாய்ப்பு குறையும்: ஆராய்ச்சியில் தகவல்


depression-in-male-partner-may-lower-pregnancy-chances-study

  • kamadenu
  • Posted: 17 May, 2018 17:41 pm
  • அ+ அ-

குழந்தையின்மை பிரச்சினைக்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் தம்பதிகளில், ஆணுக்கு மன அழுத்தம் இருந்தால் கருவுறும் வாய்ப்பு குறையும் என சமீபத்தில் வெளியான ஆராச்சியொன்றில் தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் ஆணுக்கு மன அழுத்தம் இருந்தால், அவரது துணை கருவுறுவதற்கான வாய்ப்பு 60 சதவீதம் குறைந்து விடுகிறது என தெரியவந்துள்ளது. அதேசமயத்தில் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், அது கருவுறுதலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து இந்த ஆய்வில் எதுவும் கண்டறியப்படவில்லை.

“இந்த ஆராய்ச்சி குழந்தையின்மைக்கு சிகிச்சை எடுப்பவர்களுக்கும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கும் புதிய தகவலை தருகிறது. அதன் மூலம் சிகிச்சை குறித்த முடிவுகளின் போது சிலவற்றை மருத்துவர்கள் கருத்தில் கொள்வார்கள்” என்கிறார், இந்த ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான எஸ்தர் எய்சென்பர்க்.

இந்த ஆராய்ச்சியில் 1,650 பெண்களும், 1,608 ஆண்களும் உட்படுத்தப்பட்டனர். 

இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கருவுறுதலில் பிரச்சனைகளை கொண்டுள்ள பெண்களில், 41 சதவீத பெண்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதேபோல், ஆண்களில் 50 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close