[X] Close

சிறு வயதில் ஏற்படும் அதிர்ச்சி வளர்ந்த பிறகும் பெரும் வலியை உண்டாக்கும்: ஆராய்ச்சியில் தகவல்


childhood-trauma-may-trigger-physical-pain-in-adulthood

  • kamadenu
  • Posted: 11 May, 2018 17:37 pm
  • அ+ அ-

உங்கள் குழந்தை வளர்ந்த பிறகு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? ஆமாம் என்றால், அதற்கு உங்கள் குழந்தை சிறு வயதில் எந்த விதமான மனதளவில் ஏற்படும் அதிர்ச்சிக்கும் ஆளாகிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள். ஏனென்றால், சிறுவயதில் உங்கள் குழந்தைக்கு ஏற்படும் அதிர்ச்சி அல்லது பாதகமான செயல்களால், வளர்ந்த பின் அவர்கள் உடலளவில் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என, சமீபத்தில் வெளியான ஆராய்ச்சியின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சிறு வயதில் ஏற்படும் அதிர்ச்சி, இளம் வயதில் மனோபாவம் சார்ந்த குறைபாடுகள் அல்லது தூக்கம் சார்ந்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சிறுவயதில் ஏற்படும் அதிர்ச்சியானது வளர்ந்த பிறகு அவர்களுடைய மனோபாவம், தூக்கம் ஆகியவற்றில் பிரச்சனைகளை உண்டாக்க வழிவகுக்கின்றன. அதனால், அவர்கள் உடலளவிலும் சோர்ந்து வலியை அதிக வலியை அனுபவிக்கும் நிலைமை ஏற்படும். அது அவர்களுடைய தினசரி வாழ்வில் தடையை ஏற்படுத்தும்”, என இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்களில் ஒருவரான அர்ச்சனா மத்தூர் தெரிவிக்கிறார்.

ஆனால், எப்போது நேர்மறையான எண்ணம் உடையவர்கள், தங்கள் வாழ்க்கையை தங்களுக்குள் கட்டுப்படுத்திக் கொள்பவர்கள் இத்தகைய பிரச்சனைகளுக்கு உள்ளாவதில்லை எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

“நேர்மறையான எண்ணம் உடையவர்களுக்கு இந்த ஆய்வு முடிவுகள் அவ்வளவாக பொருந்தாது. ஆனால், அவர்கள் தினமும் எழும்போது வலியை உணர்ந்தாலும், அந்த நாளே மோசமாகும் நிலைமைக்கு அவர்கள் செல்வதில்லை” என்கிறார் அர்ச்சனா.
சிறு வயதில் ஏற்படும் அதிர்ச்சி என்பது சீண்டல், அலட்சியப்படுத்துதல், காயம் ஏற்படுதல், பொருளாதார பிரச்சினைகள், பெற்றோரை இழத்தல் உள்ளிட்ட பல பிரச்சனைகளும் அடங்கும்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close