[X] Close
 

வெயிலில் இருந்து தப்பித்து குடும்பத்துடன் செல்ல 5 ‘செம்ம’ சுற்றுலா தலங்கள்


beat-the-summer-heat-at-these-popular-destinations

  • kamadenu
  • Posted: 08 May, 2018 18:00 pm
  • அ+ அ-

ஏப்ரல் மாதத்திலிருந்தே தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கத் துவங்கி விட்டது. மே, ஜூன் மாதங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். மே மாதம் பள்ளி, கல்லூரிகளும் விடுமுறை என்பதால், இந்த கோடை வெயிலை சமாளிக்க குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை பலரும் விரும்புவர். அப்படி கோடைக் காலத்தில் மகிழ்ச்சியாக சுற்றுலா செல்வதற்கு ஏற்ற சுற்றுலா தலங்கள் சிலவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.

பாலி தீவுகள்:
அதிமான கடற்கரைகளை தனக்கு சொந்தமாக்கியுள்ள பாலி தீவு முழுவதும் அழகிய இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கலாம். அன்பான மக்கள், நாக்கில் எச்சில் ஊற வைக்கும் உணவு வகைகள் ஆகியவை பாலி தீவுகளின் சிறப்பு. அதனால், இந்த கோடை காலத்தில் சுற்றுலா செல்வதற்கு மிகவும் ஏற்ற இடமாக பாலி தீவுகளை கண்களை மூடிக்கொண்டு நீங்கள் ‘டிக்’ செய்து விடலாம். இங்குள்ள ’மத்தூர்’ மலைகளில் சுற்றுலா பயணிகள் ட்ரெக்கிங் செல்லலாம். ’கத்து’ கடற்கரையில் இளைப்பாறலாம். 

லடாக்:
பனி சூழ்ந்த மலைத்தொடர் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு காரணமாக, லடாக், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரக் கூடியது. ட்ரெக்கிங் செல்ல விரும்புபவர்கள், பைக் சாகசம் புரிபவர்கள், இயற்கை விரும்பிகள், மலையேற்றம் விரும்பிகள் ஆகியவர்கள் சுற்றுலா செல்வதற்கு லடாக் சிறந்த இடமாகும்.

பூடான்:
பூடானில் சுற்றுலா செல்வதற்கு ஏகப்பட்ட இடங்கள் உண்டு. பூடானின் மலைத்தொடர்கள், பச்சைப்பசேல் என்ற நிலப்பகுதி, இயற்கை விவசாயத்தால் விளைந்த உணவுகள் ஆகியவை இந்த கோடை காலத்தை சிறந்ததாக மாற்றும். புத்த விகாரங்கள், பாரோ, தஷி, புனக்கா பள்ளத்தாக்கு ஆகியவையும் பூடானில் நாம் நிச்சயம் காண வேண்டிய பகுதிகளாகும்.

மூணாறு:
தேயிலை தோட்டங்கள், மலைகள், பள்ளத்தாக்குகள், அரியவகை தாவரங்கள் மற்றும் விலங்குகள் ஆகியவை மூணாறின் சில சிறப்பம்சங்களாகும். கடல்மட்டத்திலிருந்து 6,000 அடி உயரத்தில் மூணாறு அமைந்துள்ளது. இங்குள்ள பெரியார் வனவிலங்கு சரணாலயத்திற்கு செல்லாமல் வீடு திரும்பிவிடாதீர்கள்.

இலங்கை: 
இலங்கையில் உள்ள கடற்கரைகள் மிகவும் பிரசித்தமாகும். பாரம்பரிய சின்னங்கள், தனக்கே உரிய கலாச்சாரம், கடல் உணவுகள் ஆகியவற்றை மட்டுமே அனுபவிப்பதற்காக இலங்கைக்கு ஒருமுறையாவது சென்றுவிட வேண்டும். கொழும்பு, கண்டி, பெண்டோட்டா ஆகிய நகரங்களுக்கு நிச்சயம் செல்ல வேண்டும்.

ஏஎன்ஐ

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close