[X] Close
 

கண்ணைக் கவரும் கலைநயம்மிக்க வாரங்கல் விரிப்புகள் 


warangal-dhurries-carpets

  • பால்நிலவன்
  • Posted: 04 May, 2018 12:50 pm
  • அ+ அ-

ஹைதராபாத்திலிருந்து 4 மணி நேரப் பயணத்தில் வாரங்கல் சென்றுவிடலாம். அங்குள்ள கோட்டைக் கொத்தளங்களைப் பார்க்கத்தானே என்று கேட்டுவிடாதீர்கள்... அங்கு தயாராகும் கண்ணைக் கவரும் வண்ண விரிப்புகளைப் பார்வையிட. வாரங்கல் விரிப்புகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என்று சொன்னால் அதன் முக்கியத்துவம் ஓரளவுக்கு நமக்குப் பிடிபடக்கூடும். 

வாரங்கல் தரைவிரிப்புகள் பருத்தி இழைகள் மற்றும் சணல்நார்களில் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் தரைவிரிப்புகள் பளிச்சென்று பிரகாசமான நிறங்களைக் கொண்டிருக்கின்றன. வட்டவளைவு அலங்கார வடிவமைப்புகள் வடிவக்கணித முறையில் ஏற்றஇறக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன. இந்த வடிவமைப்புகளில் தரை விரிப்புகள் மட்டுமல்ல, கம்பளங்களும் இங்கு உருவாகின்றன.

இணைத்துக் கட்டிச் சாயமிடும் இகட் டையிங் தொழில்நுட்பத்தைத் தழுவி ஒருவித புதிய கண்டுபிடிப்பை வாரங்கல் நெசவுக் கலைஞர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இவ்விரிப்புகளில் பதிக்கப்பட வேண்டிய கை வண்ணம் அல்லது கறுப்பு அச்சிட்ட கலம்காரி அலங்கார வடிவங்களுக்காக இம்முறை கையாளப்படுகின்றன.  இதனால் தேவையற்ற நேர விரயம் மற்றும் வேலைப்பளுவைக் குறைக்கமுடியும் என்கின்றனர் இந்நெசவுக் கலைஞர்கள். 

லண்டனில் 1851ல் நடைபெற்ற கிரேட் எக்ஸ்பிஷனுக்காக பிரத்யோகமாக இரண்டு பட்டுத் துணியிலான தரைவிரிப்புகள் வாரங்கல்லிலிருந்து நெய்து அனுப்பப்பட்டன. இதற்குள் கோஹினூர் வைரமும் பொதியப்பட்டுள்ளது என்பது விலையுயர்ந்த சுவாரஸ்யம்.

கலை மற்றும் வடிவமைப்புக் களஞ்சியமாகத் திகழும் லண்டன் விக்டோரியா மற்றும் ஆல்பெர்ட் அருங்காட்சியகத்தில் அந்த பிரகாசமான சிகப்பு மற்றும் மஞ்சள் விரிப்புகள் இன்றும் இந்தியாவின் குறிப்பாக வாரங்கல்லின் பெருமையை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close