[X] Close

பெற்றோர்களுக்கு லீவ் அசைன்மென்ட்; தனியார் பள்ளியின் வித்தியாச முயற்சி


summer-vacation-assignments-for-parents

  • பாரதி ஆனந்த்
  • Posted: 23 Apr, 2018 14:36 pm
  • அ+ அ-

கல்வி ஆண்டு முழுவதும் பிள்ளைகள் தங்கள் டைரியில் வீட்டுப்பாடம் எழுதி வருவார்கள். பெற்றோரும் பிள்ளைகள் வந்தவுடன் வீட்டுப் பாடம் என்னவென்று வேகமாக எடுத்துப் பார்த்து இதைப்படி அதைப்படி என அடுத்தடுத்து வேலை வாங்குவர்.

இப்போது பள்ளி முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், பெற்றோர்களுக்காகவே வித்தியாசமான ஒரு பட்டியல் அடங்கிய துண்டு பிரசுரத்தை கொடுத்துள்ளது சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று.


இந்த விடுமுறையில் பெற்றோ செய்ய வேண்டியவை என பள்ளி நிர்வாகம் பெற்றோர்கள் சுட்டிக்காட்டியுள்ள பணிகள்:

1. ஒரு நாளில் இரண்டு வேளையாவது உங்கள் குழந்தையுடன் சேர்ந்து உணவருந்துங்கள். அப்போது விவசாயிகளின் மகத்துவத்தை அவர்களுக்கு உணர்த்துவதுடன் உணவை வீண் செய்யக்கூடாது என்பதையும் கற்றுக்கொடுங்கள்.
2. ஒவ்வொரு முறை உணவு உண்டவுடன் அவர்கள் தட்டை அவர்களே சுத்தம் செய்ய சொல்லிக் கொடுங்கள். இதன் மூலம் பிள்ளைகள் இப்படிப்பட்ட பணியும் மாண்புடையதே என்பதைத் தெரிந்துகொள்வார்கள்.
3. சமையல் வேலைகளில் அவர்களை ஈடுபடுத்துங்கள். காய்கறி, பழ சாலட் வகைகளைச் செய்ய கற்றுக் கொடுக்கலாம்.
4. தினமும் குழந்தைகளுடன் குறைந்தது 3 அண்டை வீட்டாரையாவது சந்தியுங்கள். அவர்களுடன் இணக்கமான உறவை மேம்படுத்துங்கள்.
5. பிள்ளைகளை அவர்களது பாட்டி தாத்தா வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். அவர்களின் அன்பும், அரவணைப்பும் உங்கள் பிள்ளைகளுக்கு மிகவும் முக்கியம்.
6. உங்கள் பணியிடத்திற்கு உங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்லுங்கள். நீங்கள் அவர்களுக்காக கடினமாக உழைக்கிறீர்கள் என்பதை அவர்கள் உணரச் செய்யுங்கள்.
7. உள்ளூர் திருவிழாக்களில் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். உள்ளூர் சந்தைக்கும் உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள்.
8. உங்கள் குழந்தைகளுக்கு செடி வளர்ப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்துங்கள்.
9. உங்கள் பால்ய காலம் குறித்தும் உங்கள் குடும்பக் கதைகள் குறித்தும் உங்கள் பிள்ளைகளிடம் பேசுங்கள்.
10. உங்கள் பிள்ளைகளை வெளியே வெயிலிலும் மணலிலும் விளையாட அனுமதியுங்கள். எப்போதாவது அவர்கள் கீழே விழுந்து அவர்களுக்கு சிறு காயம் ஏற்பட்டால் ஒன்றும் தவறில்லை.
11. நாய், பூனை என ஏதாவது ஒரு செல்லப்பிராணி வளர்க்க அவர்களை ஊக்குவியுங்கள்.
12. கிராமியப் பாடல்களைக் கற்றுக் கொடுங்கள்.
13. வண்ணப் படங்களுடன் கூடிய கதை புத்தகங்களை அவர்களுக்கு வாங்கிக் கொடுங்கள்.
14. தொலைக்காட்சி, கணினி, செல்போன் போன்ற மின்னணு உபகரணங்களில் இருந்து அவர்களை விலக்கி வையுங்கள்.
15. சாக்கலேட்டுகள், ஜெல்லி மிட்டாய்கள், க்ரீம் கேக்குகள், பஃப்ஸ், சமோசா போன்ற உணவுப் பதார்த்தங்களைக் கொடுக்காதீர்கள்.
16. உங்கள் குழந்தையின் கண்களை உற்றுப் பார்த்து, அவர்களை கொடுத்தமைக்காக இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். உங்கள் பிள்ளைகள்தான் உங்களுக்கான அற்புதமான பரிசு.
17. இந்த விடுமுறையில் உங்கள் நேரத்தை உங்கள் குழந்தைகளுக்காக முதலீடு செய்யுங்கள்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் செலவழிக்கும் நேரம் முதலீடுதான்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close