[X] Close

இரானி கோப்பை கிரிக்கெட்: ரெஸ்ட் ஆஃப் இந்தியா 330 ரன்கள் குவிப்பு; ஹனுமா விகாரி 114, மயங்க் அகர்வால் 95 ரன்கள் விளாசல்


irani-cricket

  • kamadenu
  • Posted: 13 Feb, 2019 10:23 am
  • அ+ அ-

விதர்பா அணிக்கு எதிரான இரானி கோப்பை கிரிக்கெட்டில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி முதல் இன்னிங்ஸில் 330 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

ரஞ்சி கோப்பை சாம்பியனான விதர்பா, ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிகளுக்கு இடையிலான இரானி கோப்பை போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் கேப்டன் அஜிங்க்ய ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய அந்த அணிக்கு தொடக்கம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. அன்மோல்பிரீத் சிங் 15 ரன்கள் எடுத்த நிலையில் ரஜ்னீஷ் குர்பானி பந்தில் போல்டானார்.

இதையடுத்து மயங்க் அகர்வாலுடன் ஹனுமா விகாரி இணைந்தார். ஹனுமா விகாரி நிதானமாக பேட் செய்ய, மயங்க் அகர்வால் மட்டையை சுழற்றினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 134 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 95 ரன்கள் விளாசிய நிலையில் யாஷ் தாக்குர் பந்தில் ஆட்டமிழந்தார் மயங்க் அகர்வால். 2-வது விக்கெட்டுக்கு ஹனுமா விகாரியுடன் இணைந்து மயங்க் அகர்வால் 125 ரன்கள் சேர்த்தார்.

இதன் பின்னர் களமிறங்கிய ரஹானே 13, ஸ்ரேயஸ் ஐயர் 19, இஷான் கிஷன் 2, கிருஷ்ணப்பா கவுதம் 7, தர்மேந்திராசின் ஜடேஜா 6 ரன்களில் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். 258 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த நிலையில் பின்கள வரிசை வீரர்கள் உறுதுணையுடன் ஹனுமா விகாரி சீராக ரன்கள் சேர்த்தார். 187 பந்துகளில் சதம் அடித்த அவர், 11 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 114 ரன்கள் எடுத்த நிலையில் சர்வாதே பந்தில் ஆட்டமிழந்தார்.

இதைத் தொடர்ந்து ராகுல் சாகர் 22, அங்கித் ராஜ்புத் 25 ரன்களில் வெளியேற 89.4 ஓவர்களில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி 330 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. விதர்பா அணி சார்பில் குர்பானி, சர்வாதே ஆகியோர் தலா 3 விக்கெட்கள் கைப்பற்றினர். விதர்பா அணி தனது பேட்டிங்கை 2-வது நாளான இன்று தொடரவுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close