[X] Close

கண்ணைப் போல கண்ணைக் காப்போம்!  


kannai-poola-kannaik-kaapom

  • வி.ராம்ஜி
  • Posted: 03 Apr, 2018 08:56 am
  • அ+ அ-

கோடைக்கு எத்தனை ஜூஸ் சாப்பிட்டாலும் தாகம் அடங்காது. எவ்வளவு சொன்னாலும், விழிப்பு உணர்வுப் பட்டியல் முடிந்துவிடாது. ஆனால் என்ன... கோடையைச் சமாளிக்க ஆயிரம் வழிகள் இருக்கின்றன.

வியர்வையே போ!

கோடைக் காலத்தில் குளிர்ந்த அல்லது மிதமான சுடுநீரில் ரோஜா இதழ்கள், வேப்பிலை போட்டுக் குளித்தால், வியர்வை நாற்றம் மட்டுமில்லாமல்  எவ்விதமான தோல் பிரச்னையும் வராமல் இருக்கும்.

தலைமுடியில் தங்கியிருக்கும் அதிகப்படியான வியர்வை நீரை அகற்ற வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். ஆலிவ் ஆயில், நல்லெண்ணெய் இரண்டையும் சமபங்கு சேர்த்து லேசாகச் சுட வைத்து சீயக்காயுடன் தேய்த்துக் குளிப்பது ரொம்பவே நல்லது. இதனால் உடல் சூடு தணியும். கண்களில் குளுமை ஏறியிருக்கும்.

அதிகமான வியர்வை, பொடுகு பிரச்சினைக்கும் இது ரொம்பவே நல்லது. வெந்தயத்தைத் தயிருடன் ஊறவைத்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால், அதற்கும் தீர்வு காணலாம். ஆண்கள் தலைமுடியை ஷார்ட்-கட் செய்துகொள்வது நல்லது. அதாவது ஒட்ட வெட்டிக் கொள்ளுங்கள்.

கண்களே... கண்களே!

கண்களைத் தரமான கூலிங் கிளாஸ் அணிந்து காத்துக்கொள்ளுங்கள். கண்களுக்குக் கற்றாழை ஜெல் மசாஜ் கொடுக்கலாம். வெயிலுக்குப் பயந்து ஏ.சி-யிலேயே தஞ்சமடைந்து கிடந்தால் சருமமும் முடியும் வறண்டுவிடும். சாத்தியமில்லாதது போலத் தெரிந்தாலும் ஏ.சி. அறைகளிலேயே தவம் கிடப்பதைத் தவிர்ப்பது நல்லது.

கோடையில் வியர்வையால் உடலின் நீர்ச்சத்து அதிகமாக வெளியேறும் என்பதால், ஒரு நாளைக்கு குறைந்தது 10 டம்ளர் நீர் அருந்த வேண்டும். கோடையில் ஏற்படும் கண் எரிச்சல், கண்கட்டி, கண்களிலிருந்து நீர் வழிவது போன்ற தொல்லைகளைத் தவிர்க்க, வெளியில் சென்று வந்ததும் குளிர்ந்த நீரால் கண்களைக் கழுவ வேண்டும். நறுக்கிய வெள்ளரிக்காயை கண்களில் சில நிமிடங்கள் வைத்திருந்தாலும், சூடு தணியும்.

உணவை மாற்றுங்கள்!

மூன்று வேளையும் திட உணவு எடுத்துக் கொள்வதைவிட கஞ்சி, கூழ், மோர், இளநீர் என திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அலுவலகங்களுக்கு கொண்டு போகும் லஞ்ச் பாக்ஸ்களில் சோறு, சாம்பார், ரசம், பொரியல் என வழக்கமான உணவுகளுக்குப் பதிலாக நீர்ச்சத்துள்ள காய், பழங்களின் சாலட்கள், மோர் ஆகியவை நிரம்பியிருக்கட்டும். சாலட்கள் அதிகம் எடுத்துக்கொள்வதால் சமையலறை வெப்பத்தில் வியர்க்க, விறுவிறுக்க அதிக நேரம் நிற்பதில் இருந்தும் தப்பிக்கலாம். வாழைப்பழம் நிறைய சாப்பிடுவதும் கோடைகாலத்தில் நல்ல உடல்நலத்தை தக்கவைக்கும். இப்போது தர்பூசணி பழங்கள் நிறைய கிடைக்கும். அந்த பழத்தில் இருப்பது 90 சதவீதம் தண்ணீர் தான். தர்பூசணி போன்று வெள்ளரிக்காயிலும் நிறைய நீர்ச்சத்து உள்ளது. அதனால், இவற்றை அதிக அளவில் சாப்பிடுங்கள்.

உணவில் அதிகக் காரம், மசாலா, பொரித்த உணவுகள் வேண்டவே வேண்டாம். வியர்வையால் குழந்தைகள் சீக்கிரம் சோர்ந்து போவார்கள் என்பதால் அவர்களுக்கு நீர் உணவுகள் அடிக்கடி தருவது அவசியம். வயிறு முட்ட உண்பதையும், காரசாரமான உணவுகளையும் தவிர்க்கவும். நீராகாரங்களையும், வெயில் காலங்களில் விளையும் காய்கள், பழங்களையும் அதிகமாக எடுத்துக் கொள்ளவும். பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் தவிர்த்து இளநீர், மோர் பருகலாம். மோரில் பச்சை மிளகாய்க்குப் பதில் இஞ்சி, பெருங்காயம் சேர்க்கலாம். குடிநீரில் குறுமிளகு, சிறிதளவு வெட்டிவேர், சீரகம் மற்றும் பனங்கற்கண்டு  சேர்த்து கொதிக்கவிட்டு, ஆறவைத்துக் குடிக்கலாம். முடிந்த வரை டீ, காபி தவிர்த்து எலுமிச்சைச் சாற்றில் சர்க்கரை மற்றும் உப்பு சம அளவு கலந்து குடிக்கலாம். நறுக்கிய வெள்ளரிக்காயில் மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள் தூவி சாப்பிட்டால்... நீர் கடுப்பைத் தவிர்க்கலாம். எண்ணெய் பொருட்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும். காலையில், ஊறவைத்த வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது.

தொப்பி /குடை:

தலையில் வெயில் நேரடியாக படாதவாறு தொப்பி, குடை பயன்படுத்தலாம். வியர்வையை உறிஞ்சி அலர்ஜிகளைத் தவிர்க்கும் காட்டன் சாக்ஸ், கோடைக்கு ரொம்பவே நல்லது.

நோ மேக் அப்

வேனல் கட்டிகளுக்கு சந்தனமும் மஞ்சளும் கலந்து பூசி வர, நல்ல பலன் கிடைக்கும். அதிகப்படியான மேக்கப், கோடையில் வேண்டாம்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close