[X] Close

சிறந்த சர்வேயர்... மாமன்னன் ராஜராஜசோழன்!


surveyaor-rajaraja-chozan

  • வி.ராம்ஜி
  • Posted: 02 Apr, 2018 14:19 pm
  • அ+ அ-

நினைக்க நினைக்க வியப்பு, பிரமிப்பு. அதிசயம், ஆச்சரியம்... ராஜராஜ சோழனின் குணங்களும் அவனின் ஆட்சியும் அப்படித்தான். அதனால்தான் காலங்கள் கடந்தும் கம்பீரமாக நிற்கிறான் சோழ மாமன்னன் ராஜராஜன். கம்பீரமாக நிற்கிறது தஞ்சைப் பெரிய கோயில்!

• நிலங்களுக்கு வரி நிர்ணயம் செய்து துல்லியமாக வாங்குவதற்கான நடைமுறைகளை மிகச்சரியாகச் செயல்படுத்தியவன் ராஜராஜசோழன் என்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள். பரந்து விரிந்திருந்த சோழ தேசத்தின் பரப்பளவையும் அந்தப் பரப்பளவுக்குள் எப்படியான நிலங்களெல்லாம் இருக்கின்றன என்பதையும் அறிய விரும்பிய ராஜராஜ சோழன், மிகத் துல்லியமாக அளந்தான் என்று வியப்புடன் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். அந்த வகையில் உலகின் முதல் சர்வேயர், சிறந்த சர்வேயர் என்று எல்லாமே சோழப் பெருந்தகை ராஜாராஜப் பெருவுடையார்தான்!

 நெல் அளக்க ‘ஆடவல்லான்’ எனும் பெயரில் ஓர் மரக்காலும் நியமித்தான். விளை நிலங்களின் மொத்த பரப்பளவு, வரி விலக்கு பெற்றவை, தானமாகத் தரப்பட்டவை எவ்வளவு? அவர்கள் கட்ட வேண்டிய வரி எவ்வளவு? எவ்வளவு நெல் அளக்க வேண்டும் என அனைத்தையும் வரையறைக்குள் கொண்டு வந்தான். அதன்படி கோயிலுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ 1 லட்சத்து 15 ஆயிரம் கலம் நெல்லும், 300 கழஞ்சுப் பொன்னும், 2 ஆயிரம் காசுகளும் நிரந்தர வருமானமாகக் கிடைத்தன.

• கோயிலில் விளக்கு ஏற்ற நெய் முதலானவை மக்களிடம் இருந்து தானமாகக் கிடைக்கவும் ஏற்பாடு செய்தான். அதற்காக மக்களுக்கு ஒரு காசுக்கு 2 ஆடு, இரண்டு காசுக்கு 1 பசு, மூன்று காசுக்கு ஒரு எருமை எனக் கொடுத்தான். அவர்கள் ஒரு விளக்குக்கு, நாள் ஒன்றுக்கு ஓர் உழக்கு நெய் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டான். இதனால், தான் பெரிதும் போற்றிய கோயிலின் பூஜைகள் தங்கு தடையின்றி நடக்க ஏற்பாட்டினைச் செய்தான்.

• வாழைப்பழம், செண்பக மொட்டு, எலுமிச்சை, பருப்பு, மிளகு, சீரகம், சர்க்கரை, நெய், புளி, தயிர், கொள்ளு, உப்பு, வாழையிலை, வெற்றிலை, பாக்கு, கற்பூரம், விறகு, பழைய அரிசி ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் கால்நடைகளின் விலைகளைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தான். கோயிலுக்கு, பூஜைக்கு, நைவேத்தியத்திற்கு, அபிஷேகத்திற்கு தினமும் 150 வாழைப்பழங்கள் வழங்க வேண்டும் என்று வாழை விவசாயிகளுக்கு வட்டிக்குப் பணம் வழங்கினான். அந்த வட்டிக் காசுக்குப் பதிலாக, தினமும் 150 வாழைப் பழங்கள் பெரியகோயிலுக்குக் கொடுக்கச் சொன்னான்.

இவற்றை அறிவிக்கும் கல்வெட்டுக் குறிப்புகளை, இப்போதும் தஞ்சை பெருவுடையார் கோயிலில், தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோயிலில் பார்க்கலாம்! 

வாக்களிக்கலாம் வாங்க

'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close