[X] Close

வெயிலில் சன் ஸ்ட்ரோக் வரும்... உஷார்!


kodai-veyil-sun-storke

  • வி.ராம்ஜி
  • Posted: 31 Mar, 2018 08:58 am
  • அ+ அ-

இதோ... கோடைக்கு வருவதற்கு முன்பே வெயில் வந்தாச்சு. நான்கைந்து மாவட்டங்களில் வெயிலின் அளவு செஞ்சுரியைத் தாண்டி இப்போதே எகிறியடித்துக் கொண்டிருக்கிறது.

சன் ஸ்ட்ரோக்

வயதானவர்கள், இதயப் பிரச்சினை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், எதிர்ப்புத் திறன் குறைந்தவர்கள் வெயிலில் நீண்ட நேரம் போகக் கூடாது என அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள். அவசியம் எனில், அதற்குரிய பாதுகாப்புடன் செல்ல வேண்டும்.

உடலில் நீர் சரியான அளவில் இருந்தால்தான், ரத்த ஓட்டம் சீராக நடைபெறும். ரத்த ஒட்டம் மூளைக்குச் சரியாக செல்லாதபோது, சன் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, மயக்கம் வரலாம். அப்போது சுய நினைவு இருப்பவர்களுக்கு, வாய் வழியாகத் திரவ உணவுகளைக் கொடுத்து எழுப்பலாம். சுயநினைவு இல்லாதவர்களை, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெயில் நேரடியாக உடலில் படுவதைத் தவிர்ப்பதே நல்லது. வயதானவர்கள் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது ரொம்பவே அவசியம்.

வயிற்றுப்போக்கு

வெளியில் அதாவது ஹோட்டல்களில் சாப்பிடுபவர்களுக்கு, வெப்பச் சூழலில், அடிக்கடி ஃபுட் பாய்சன் ஏற்படும். இதனால், தொடர் வயிற்றுப்போக்கால் அவதிப்பட நேரிடலாம்.  உணவகங்களில், நீர் பற்றாக்குறையால் சுகாதாரமற்ற நீரைக்கொண்டு, உணவு தயாரிக்கப்படும்.

வெளியில் குடிக்கும் தண்ணீர்கூட சுகாதாரமானதா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.  நீரை நன்றாகக் கொதிக்கவைத்து, ஆறி வடிகட்டிய பிறகு, குடிப்பதே நல்லது. மழைக்காலத்தில் எப்படி நீர் மூலம் தொற்று ஏற்படுமோ அதேபோல் வெயில் காலத்திலும் ஏற்படும் என்கிறார்கள்.

டைபாய்டு

கோடையில் டைபாய்டு காய்ச்சல் அதிகம் தாக்கும். தண்ணீர் முலம் பரவும் நோய் என்பதால், 21 நாட்கள் வரை இதன் தீவிரம் இருக்கும். அவரவர் உடல் எதிர்ப்புத் திறனை, நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து, காய்ச்சலின் வீரியம் மாறுபடும். வெளியில் சாப்பிடுவதைத் தவிர்த்து, வீட்டில் தயாரித்த உணவுகளை உண்பது நல்லது. சுகாதாரமற்ற உணவு, தண்ணீர் போன்றவற்றைத் தவிர்த்தாலே, இந்தக் காய்ச்சலில் இருந்து தப்பிக்கலாம்.

அம்மை நோய்கள்

வெயில் காலத்தில் அம்மை நோய்கள் அதிகம் தாக்கும். குழந்தைகளுக்கு அம்மைவந்தால், அதிகம் சிரமப்படுவார்கள் என்பதால், டாக்டர் ஆலோசனைப்படி தடுப்பூசிகள் போடுவதே சிறந்தது. இளநீர், பழங்கள், காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்வதன் மூலம், நீர்ச்சத்தைச் சரியாகப் பராமரித்தாலே, அம்மை நோய்களைத் தவிர்க்கலாம்.

வெயில் பாட்டுக்கு கொளுத்திக் கொண்டிருக்கட்டும். நாம் பாட்டுக்கு பாதுகாப்புடன் இருப்போம்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close