[X] Close

ஃபேஸ்புக்கில் திடீரென ட்ரெண்டாகும் #throwbacktimes


throwbacktimes

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 Mar, 2018 11:39 am
  • அ+ அ-

இந்த ஃபேஸ்புக், ட்விட்டரில் எப்போது எது ட்ரெண்டாகும் என்று கூற முடியாது. திடீரென வெளிநாட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் எல்லோரும் புரொபைல் பிக்சரை மாற்றி வைத்திருப்பர்.

திடீரென கருப்புவெள்ளை புகைப்படத்தை 10 நாட்களுக்குப் பகிர வேண்டும் என ஒரு சேல்ஞ்சை முன்வைப்பர். சில நேரங்களில் ஆக்கபூர்வமான விஷயங்களை ட்ரெண்டாக்கி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவர்.

ஜல்லிக்கட்டுக்காக நடந்த தன்னெழுச்சிப் போராட்டத்தின்போது சமூகவலைதளங்களின் பங்கு முக்கியமானதாக இருந்தது.
இப்படி ட்ரெண்ட்களைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. இப்படித்தான், நேற்றுமுதல் ஃபேஸ்புக்கில் திடீரென ட்ரெண்டாகி நெட்டிசன்களை எழுப்பிவிட்டிருக்கிறது  #throwbacktimes. அதாவது ஃபேஸ்புக்காரர்கள் எல்லோரும் தங்களது 10 வருடத்துக்கு முந்தைய ஃபோட்டோக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். சிலரது ஃபோட்டோக்கள் உண்மையிலேயே சிரிக்க வைக்கிறது. சிலரது ஃபோட்டோக்களைப் பார்க்கும்போது 10 வருடத்தில் இவ்வளவு பெரிய மாற்றமா? ஆளே வேற மாதிரில்ல இருக்காங்கன்னு நினைக்க வைக்கிறது. இன்னும் சில ஃபோட்டோக்கள் ச்சே... எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டாங்க கேட்டகரியில் அடங்குகிறது. 

இதுல.. கடைசில என்னையும் பகிர வச்சுட்டங்களேன்னு.. வசனத்தோடு சிலர் ஃபோட்டோக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close