[X] Close

கோடையை ஜில்லுன்னு வரவேற்போம்! நார்ச்சத்து, நீர்ச்சத்து உணவுக்கு மாறுவோம்!


kodai-jillunnu-varaverpom

  • வி.ராம்ஜி
  • Posted: 28 Mar, 2018 08:31 am
  • அ+ அ-

கோடைக்காலத்தில் நீர்ச்சத்து அதிக அளவில் தேவைப்படும். காய்கறிகளில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. காய்கறிகளை முடிந்தவரை பச்சையாகவோ அல்லது லேசாக வேக வைத்தோ உட்கொண்டால்தான் அதிக அளவிலான நீர்ச்சத்தினை பெற முடியும். காய்கறிகளைப் போன்று பழங்களிலும் நிறைய நீர்ச்சத்துகள் உள்ளன.

காய்கறிகளையும், பழங்களையும் கோடைக் காலத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக உட்கொள்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது. தாகத்தையும் தணிக்கும். சூட்டையும் குறைக்கும். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்தினையும் வழங்கும். வெயிலின் உக்கிரத்தால் வரும் உடல் சோர்வைப் போக்கி, பலமூட்டும்.

நீர்ச்சத்துள்ள கிர்ணி, தர்பூசணி, வெள்ளரி, முள்ளங்கி, நூல்கோல், பீர்க்கங்காய், புடலங்காய், மாதுளை, ஸ்ட்ராபெர்ரி, நுங்கு, வாழை, கீரைகள் என நீர்ச்சத்துள்ள காய்கறிகளை நிறைய எடுத்துக்கொள்ளலாம். உணவில் புதினா, கொத்தமல்லி, எள்ளு, ஜீரகம், நன்னாரி விதை, வெந்தயம், எலுமிச்சை முதலானவற்றை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

எலுமிச்சை, புதினா, இஞ்சி, தேன் கலந்த சாறு அல்லது டீயை தினமும் ஒருவேளை குடிக்கலாம். புதினா இலைகளும், இஞ்சியும் கலந்த மூலிகை டீ எடுத்துக்கொள்ளலாம்.

நீர்மோர், இளநீர், பதநீர், கம்பங்கூழ், கேழ்வரகு கூழ் போன்ற நீர் ஆகாரங்களை சாப்பிட்டுவர, உடல் வறட்சியாகாது. அருகம்புல் சாறு, நெல்லிச் சாறு, தர்பூசணி சாறு, வெள்ளரிச் சாறு,  சிட்ரஸ் வகை பழச்சாறுகள் போன்றவை இழந்த நீரை சமன் செய்துவிடும்.

வெப்பத்தை அதிகரிக்கும் கோதுமை, மைதா, சிக்கன், ஊறுகாய் மற்றும்  பாக்கெட் உணவுகளைத் தவிர்க்கலாம்.

கோடையை, குளுகுளுவென வரவேற்போம்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'எல்.கே.ஜி' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close