[X] Close

அன்புள்ள அப்பா... நான் ரசித்த ஃபேஸ்புக் பதிவு 


smoking-is-injurious-to-health

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Mar, 2018 13:14 pm
  • அ+ அ-

நாம் எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும்கூட ஃபேஸ்புக், ட்விட்டரை ஒருமுறை லேசாக எட்டிப்பார்த்துவிட்டுவர மறப்பதில்லை. அப்படி இன்று திடீரென ஃபேஸ்புக் பக்கம் போனபோது கண்ணில் பட்டது அந்தப் பகிர்வு. 
கண்ணைக் கவரும் வகையில் எழுதப்பட்டிருந்ததால் அதை வாசித்துப் பார்த்தேன். தனது சின்னஞ்சிறு மகளின் வேண்டுகோளைத் தனது ஃபேஸ்புக் சுவரில் பகிர்ந்திருந்தார் அந்த நண்பர். 


அது ஒரு அப்பாவுக்கு அன்பு மகளின் விடுத்த கோரிக்கை. அந்த அன்புக் கடிதம் இதோ.. 


அன்புள்ள அப்பா, 
எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். நீங்கள் யதார்த்தமானவர், கலையாற்றல் மிக்கவர். 
உங்களிடம் எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம் நீங்கள் புகைபிடிப்பது மட்டுமே. உங்கள் உடல் நலன் மீது உங்களுக்கு உண்மையான அக்கறை இருந்தால் இந்தப் பழக்கத்தை நீங்கள் விட்டுவிடுவீர்கள் தானே? 


இது ஒரு குட்டிக் குழந்தையின் குட்டிக் கடிதம்தான். ஆனால், அதன் தாக்கம் பெரிது. 
சில ஃபேஸ்புக் பகிர்வுகளை அப்படியே கடந்து சென்று முடிவதில்லை. இந்தப் பதிவும் அந்த வகையறாதான். 


இந்தப் பதிவுடன் எனக்குத் தெரிந்த குடும்பத்துக்கு நேர்ந்த சோகக் கதை குறித்தும் எழுத விரும்புகிறேன். இதைப் படித்தாவது புகைபிடிக்கும் பழக்கத்தை ஒரு சிலரேனும் நிறுத்தக்கூடும் என்ற ஆசையில். 
எனக்குத் தெரிந்த குடும்பம் அது. அப்பா, அம்மா, ஒரே மகள். அளவான அழகான குடும்பம். வசதிக்குக் குறைவில்லை. மகளைச் சீராட்டி வளர்த்தனர். மகள் அப்பாவின் செல்லம். அப்பாவுக்கும் அப்படித்தான் மகள் மீது அவ்வளவு பிரியம் ஆனால் அதே அளவு பிரியத்தை சிகரெட் மீதும் வைத்திருந்தார். செயின் ஸ்மோக்கர். அடுத்தடுத்து புகைபிடித்துக் கொண்டே இருப்பார். ஒருநாள் நெஞ்சுவலி வந்தது அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சைக்குப் பின் இனி சிகரெட் பக்கமே போகக் கூடாது என மருத்துவர்கள் எச்சரித்தனர் மருத்துவர்கள். கேட்டாரா அவர், மருத்துவமனையிலேயே புகைபிடித்தார். விளைவு ஒரே வாரத்தில் அவர் உயிர் பிரிந்தது. சில பழக்கங்களை விட்டுவிலகக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், விட்டுவிலகாவிட்டால் உயிர் பிரியும் என்று தெரிந்த பின்னரும் அதைச் செய்வது குற்றச்செயல். 
நீங்கள் உங்கள் குடும்பத்தினரின் முன் குற்றவாளியாக நிற்காதீர்கள். 


அருவி படத்தில் ஒரு காட்சி வரும் அப்பா சிகரெட் பிடிக்காதீர்கள் அப்பா வீசுது என்று மகள் கூற கடைசியாக ஒரு முறை சிகரெட்டை இழுத்துவிட்டுத் தூக்கி எறிவார் அந்தத் தந்தை. 
அதைப்போலவே புகைபிடிக்கும் பழக்கம் உள்ள அனைவருமே இக்கணமே புகைப் பழக்கத்தை விட்டுவிடுங்களேன். 
 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close