[X] Close

வாட்ஸ் ஆப்பில் முகம் தொலைக்கும் இளைஞர்கள்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வேதனை


whats-app-kundrakudi

பரமக்குடி அரசு கலை கல்லூரியில் மாணவிக்கு பட்டம் வழங்கினார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.

  • kamadenu
  • Posted: 25 Mar, 2018 15:40 pm
  • அ+ அ-

 

பரமக்குடி அரசு கலை கல்லூரியில் 17-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மணிமாறன் தலைமை வகித்தார். இதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:

வாட்ஸ் ஆப், பேஸ்புக் ஆகியவற்றில் இளைய தலைமுறையினர் தங்கள் முகங்களை தொலைத்து விடுகின்றனர். ஆனால் இணைய தளம், வாட்ஸ் ஆப், பேஸ்புக் இல்லாத காலங்களிலேயே திருவள்ளுவர், விவேகானந்தர், பாரதியார் போன்றோர் அறிய பெரும் கருத்துக்களை தமிழ் சமூகத்திற்கு வழங்கியுள்ளனர். இவர்களை பின்பற்றி இளைஞர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

போட்டிகள் நிறைந்த உலகமாக உள்ளது. அதை நேராக எதிர் கொள்ள வேண்டும். மனித முயற்சியோடு இறை நம்பிக்கையும் இணைந்தால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். பெறும் பட்டத்தால் தான் மட்டும் அல்லாது இந்த சமுதாயத்திற்கு பயன் பெறும் வகையில் செயல்பட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் 625 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close