[X] Close

எஸ்பிஐ வங்கியின் ‘யோனோ’ சேவை நிறுத்தம்


sbi-bank

  • kamadenu
  • Posted: 19 Nov, 2018 10:51 am
  • அ+ அ-

ஆதார் இணைப்பு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, பாரத ஸ்டேட் வங்கி வழங்கி வந்த ‘யோனோ’ சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதற்கு மாற்று வழி என்ன என்பது குறித்து ரிசர்வ் வங்கியிடம் விளக்கம் கேட்டுள்ளது.

ஆதார் எண் இணைப்பு தொடர்பாக செப்டம்பர் 26-ம் தேதி உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப் பளித்தது. வங்கிகள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஆதார் எண் இணைப்பைக் கட்டாய மாக்கக் கூடாது என்று கூறியது. இதையடுத்து ஆதார் இணைப் புக்குப் பதில் வேறு மாற்று வழிகள் குறித்து யுஐடிஏஐ அமைப்பு, மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகள் ஆலோசித்து வந்தன.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் எஸ்பிஐ வங்கி தனது ‘யோனோ’ சேவையை நிறுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளது. எஸ்பிஐ வங்கி எந்தவித காகித வடிவிலான ஆவணங்களும் இல்லாமல் வங்கிச் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க ‘You Only Need One’ என்கிற பெயரில் (YONO) சேவையை நவம்பர் 2017-ல் தொடங்கியது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இருந்த இடத்திலிருந்தே எல்லா விதமான வங்கிச் சேவைகளையும் பெற வழிவகை இருந்தது.

ஆகஸ்ட் வரை 25 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி வந்தனர். அடுத்த இரண்டு வருடங்களில் 25 கோடி வாடிக்கையாளர்கள் இந்த சேவையைப் பயன்படுத்த இலக்கு வைத்திருந்தது எஸ்பிஐ வங்கி.

மீண்டும் வங்கி கிளைக்கு

தற்போது இந்தச் சேவையை எஸ்பிஐ வங்கி நிறுத்தியதால் மீண்டும் வாடிக்கையாளர்கள் ஆவணங்களுடன் வங்கிக் கிளை களுக்குப் படையெடுக்கும் நிலை உருவாகியுள்ளது. வங்கியைச் சேர்ந்த அதிகாரி இதுகுறித்து கூறுகையில், “உச்சநீதிமன்ற தீர்ப்பினால் இ-கேஒய்சி நடை முறையைச் செயல்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கியிடம் விளக் கம் கேட்டுள்ளோம். விளக்கமும் தீர்வும் கிடைத்தபிறகு இ-கேஒய்சி நடைமுறையைத் தொடங்கு வோம்” என்றார்.உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் எஸ்பிஐ வங்கி தனது ‘யோனோ’ சேவையை நிறுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close