[X] Close

இருமுடி கட்டிச் சென்ற இந்து அமைப்பின் பெண் தலைவர் கைது எதிரொலி; கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்: சபரிமலையில் பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீஸார் குவிப்பு


protest-in-kerala

  • kamadenu
  • Posted: 18 Nov, 2018 10:41 am
  • அ+ அ-

கேரளாவில் சபரிமலை ஐயப் பன் கோயிலுக்கு இருமுடி கட்டிச் சென்ற இந்து அமைப் பின் பெண் தலைவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, நேற்று முழு அடைப்பு போராட் டம் நடந்தது. இதனால் ஏற் பட்ட பதற்றம் காரணமாக ஏராளமான போலீஸார் குவிக் கப்பட்டனர். ஆனாலும், கார்த் திகை மாதப் பிறப்பை முன் னிட்டு ஐயப்பன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலையில் சாமி தரிசனம் செய்தனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சபரிமலை ஐயப்பன் கோயி லில் இளம் பெண்களை அனு மதிக்க ஒரு பிரிவினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரி வித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீது உடனடியாக விசாரணை நடத் தவும் முந்தைய தீர்ப்புக்கு தடை விதிக்கவும் கோரப்பட் டது. இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், மறு ஆய்வு மனுக் களை வரும் ஜனவரி மாதம் விசாரிக்க ஒப்புக் கொண்டது. இருப்பினும், இளம் பெண் களை கோயிலுக்குள் செல்ல விடமாட்டோம் என போராட்டக் காரர்கள் அறிவித்தனர்.

இந்நிலையில், வருடாந்திர மண்டல பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. சுமார் 2 மாதங்களுக்கு தொடர்ந்து கோயில் திறந்திருக்கும். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இளம் பெண்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கேரள அரசு அறிவித்தது. இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக் கப்பட்டுள்ளனர்.

வருடாந்திர பூஜையின் முதல் நாளில் ஐயப்பனை தரி சிப்பதற்காக, ஆயிரக்கணக் கான பக்தர்கள் நேற்று மாலையே சபரிமலையில் இரு முடியுடன் குவியத் தொடங் கினார்கள்.

இந்நிலையில், இந்து ஐக்கிய வேதி அமைப்பின் தலைவர் கே.பி.சசிகலா (50) என்பவர் விரதம் இருந்து இரு முடியுடன் நேற்று முன்தினம் நள்ளிரவில் சபரிமலைக்குச் செல்ல முயன்றார். ஆனால், மரக்கூடம் அருகே அவர் சென்ற போது, இரவு நேரத் தில் பக்தர்களை அனுமதிக்க முடியாது எனக்கூறி போலீ ஸார் தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர் திரும்பிச் செல்ல மறுத்ததால் நேற்று அதிகாலை 2 மணியளவில் போலீஸார் அவரை ரன்னி போலீஸ் நிலை யத்துக்கு அழைத்துச் சென் றனர்.

பின்னர், உத்தரவை மீறிய தாகக் கூறி அவரை கைது செய் தனர். அவருடன் மற்றொரு அமைப்பைச் சேர்ந்த சுதிர் என்பவரையும் கைது செய் தனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அறிந்த ஐக்கிய வேதி அமைப்பின் தொண்டர்கள் ரன்னி போலீஸ் நிலையம் முன்பும் எருமேலி யிலும் அதிகாலையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாநிலம் முழுவதும் நேற்று 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்தனர்.

இதனிடையே, போலீ ஸாரின் இந்த நடவடிக்கைக் குக் கண்டனம் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் ஸ்ரீதரண் பிள்ளை, “சபரி மலையின் பாரம்பரியத்தை அழிக்க மாநில அரசு விரும்பு கிறது. சசிகலாவை கைது செய் ததைக் கண்டித்து நடை பெறும் முழு அடைப்பு போராட் டத்துக்கு பாஜக ஆதரவு அளிக் கும்” என்றார். இதேபோல் இந்து அமைப்புகளும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரி வித்தன.

காவல் நிலையத்தில் இருந்த சசிகலாவும் தன்னை கோயிலுக்குச் செல்ல அனு மதிக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.

இதனால் மாநிலம் முழு வதும் நேற்று பஸ்கள், ஆட் டோக்கள் இயங்கவில்லை. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பஸ்கள் இயங் காததால், சாலைகள் வெறிச் சோடிக் காணப்பட்டன. இத னால் மருத்துவமனைக்குச் செல்பவர்கள், ரயில் நிலை யம் செல்பவர்கள் அவதிப் பட்டனர்.

திருவனந்தபுரத்தில் சில அரசு பஸ்கள் மீது போராட் டக்காரர்கள் கல்வீசி தாக்கி னர். காரில் சென்ற மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோழிக்கோடு மாவட்ட செய லாளர் மகன் மற்றும் மருமகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

எனினும், ஐயப்ப பக்தர் களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், நிலக்கல்லில் இருந்து பம்பை வரை போலீஸ் பாதுகாப்புடன் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. கோயில் அருகே கடைகள் வழக்கம் போல திறக்கப்பட்டிருந்தன.

இதனிடையே, மலையாள மாதமான விருச்சிகம் மற்றும் தமிழ் மாதமான கார்த்திகை முதல் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி தலைமையில் வழக்க மான பூஜைகள் தொடங்கின. அதிகாலை முதலே குழந்தை கள் உள்ளிட்ட ஆயிரக் கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

ஜாமீனில் விடுவிப்பு

இதனிடையே, சசிகலா வுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கினால் அவரை கோயி லுக்குச் செல்ல அனுமதிப்ப தாக போலீஸார் தெரிவித்த னர். இதையடுத்து, நேற்று மதியம் சசிகலாவை திரு வல்லா நீதிமன்றத்தில் போலீ ஸார் ஆஜர்படுத்தினர். நீதி மன்றம் சசிகலாவுக்கு ஜாமீன் வழங்கியதையடுத்து, அவர் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ததாகக் கூறப்படுகிறது.

தேவசம்போர்டு முடிவு

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிக் கும் திருவாங்கூர் தேவசம் போர்டு தலைவர் ஏ.பத்மகுமார் நேற்று கூறும்போது, “வழக் கறிஞர் சந்திர உதய் சிங் மூலம் உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை புதிதாக ஒரு மனு தாக்கல் செய்ய உள் ளோம். அதில், ஐயப்பன் கோயி லில் அனைத்து வயது பெண் களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதி மன்ற உத்தரவை அமல்படுத்த அவகாசம் கோரப்படும்” என்றார்.

பாஜக தலைவர் கைது

நிலக்கல் பகுதியில் உள்ள சோதனைச் சாவடி வழியாக சபரிமலை செல்ல முயன்ற பாஜக மூத்த தலைவர் கே.சுரேந்திரனை போலீஸார் நேற்று மாலை கைது செய்தனர். பின்னர் அவரை பத்தனம்திட்டா காவல் நிலை யத்துக்கு அழைத்துச் சென் றனர். அவர் மீது தடை உத்தரவை மீறி அமைதியை குலைக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்யப் போவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close