[X] Close
 

கர்நாடகா தேர்தலில் சுயேட்சையாக போட்டி: திவ்யா ஸ்பந்தனாவின் தாய் முடிவு


divya-spandanas-mother-plans-to-contest-for-karnataka-polls-as-independent

  • பாரதி
  • Posted: 21 Mar, 2018 21:29 pm
  • அ+ அ-

அரசியலில் திவ்யா ஸ்பந்தனா, திரையுலகில் ரம்யா என அறியப்படுபவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் சமூகவலைதள தலைவராக இருக்கிறார். இவரின் தாயார் ரஞ்சிதா, வரவிருக்கும் கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்.


வரும் மே மாதம் கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடப்போவதாக திவ்யாவின் தாயார் தெரிவித்துள்ளார்.


"நான் காங்கிரஸ் சார்பில் போட்டியிட சீட் கோரவில்லை. சுயேட்சையாகப் போட்டியிட திட்டமிட்டுள்ளேன். இதன் காரணமாக நான் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்படுகிறேன் என்று அர்த்தமில்லை. நான் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் எளிமையான தொண்டராகவே இருந்திருக்கிறேன். ஆனால், இன்று கட்சியில் எனது பங்களிப்பு யாராலும் அங்கீகரிக்கப்படவில்லை. அடுத்த வாரம் இது குறித்து முடிவெடுக்கவிருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.


முன்னதாக ரஞ்சிதா, "நான் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட விரும்புகிறேன். ஒருவேளை எனக்கு சீட் மறுக்கப்பட்டால் சுயேட்ச்சையாகப் போட்டியிடவும் தயாராக இருக்கிறேன்" எனக் கூறியிருந்தார்.


தனது மகளுக்கு கட்சியில் இன்னும் நல்ல பதவி தர வேண்டும் என்றுகூட அவர் கோரிவருகிறார். தற்போது அவர் ஒரு வாரத்தில் இறுதி முடிவை அறிவிப்பதாகக் கூறி தேர்தல் செக் வைத்துள்ளார்.


திவ்யா ஸ்பந்தனா தமிழில் குத்து படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close