[X] Close

வன்முறை சித்தாந்தத்தை பின்பற்றும் நகர்ப்புற நக்சல்களை ஆதரிக்கிறது காங்கிரஸ்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு


modi-criticize-congress

பிரதமர் மோடி | கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 10 Nov, 2018 08:56 am
  • அ+ அ-

வன்முறை சித்தாந்தத்தை பின்பற் றும் நகர்ப்புற நக்சல்களுக்கு காங் கிரஸ் கட்சி தொடர்ந்து உறுதுணை யாக இருந்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார். மேலும், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு அம் மாநில மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் எனவும் அவர் வேண்டு கோள் விடுத்தார்.

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு வரும் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை யொட்டி, அங்கு தேர்தல் பிரச்சாரங் கள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

மாநிலத்தில் 15 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் பாஜகவை இந்தத் தேர்தலில் எப்படியாவது வீழ்த்த வேண்டும் என காங்கிரஸும் ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிர களப் பணியாற்றி வருகின்றன.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநி லம் ஜக்தால்பூர் பகுதியில் பாஜக சார்பில் நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

ஒருகாலத்தில் சத்தீஸ்கரும் நக்சலிசமும் பின்னிப்பிணைந்து பிரிக்க முடியாதவையாக இருந்து வந்தன. மாநிலத்தில் எங்கும் நக்சல்களின் ஆதிக்கம் நிறைந்து காணப்பட்டது. அரசின் எந்தவொரு நலத்திட்டங்களும் சத்தீஸ்கருக்கு சென்று சேராதவாறு நக்சல்கள் தடையாக செயல்பட்டனர். இதனால் சத்தீஸ்கரில் வளர்ச்சி என்பதே இல்லை என்கிற நிலை உருவாகியிருந்தது.

ஆனால், கடந்த 2003-ம் ஆண்டு மாநிலத்தில் பாஜக ஆட்சி மலர்ந் தது முதலாக சத்தீஸ்கரின் சரித்திரம் திருத்தி எழுதப்பட்டது. நக்சல் களுக்கு எதிராக கடுமையான நட வடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் விளைவாக, மாநிலத்தில் நக்சல் ஆதிக்கம் கணிசமாக ஒடுக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங் கப்பட்டது. பழங்குடியின மக்களின் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி அளிக்கப்பட்டது. பாஜகவின் இந்த தொடர் நடவடிக்கையின் விளைவாக, தற்போது சத்தீஸ் கரும் இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டு கொண்டிருக்கிறது.

நக்சல்களுக்கு எதிரான நடவடிக் கைகளில் பாஜக ஈடுபட்டுக் கொண் டிருக்கும் சமயத்தில், அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் இருந்து வருகிறது. குறிப்பாக, நாட்டை அழிவுப்பாதையில் கொண்டு செல்லும் நகர்ப்புற நக்சல்களுக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக் கிறது. நகர்ப்புற நக்சல்கள் எனக் கூறப்படுபவர்கள் நகரங்களில் ஏசி வசதி, சொகுசு கார் என சுகபோகமான வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் வெளிநாடுகளில் படிக்கிறார்கள். ஆனால், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள பழங்குடி மக்களின் குழந்தைகளை நக்சல் தீவிரவாதத்தில் நுழைக்க அவர்கள் முயன்று வருகிறார்கள். பேனா பிடிக்க வேண்டிய வயதில் துப்பாக்கி தரப்படுகிறது. பழங்குடி யினர்கள் வறுமையின் விளிம்பில் இருப்பதையே நக்சல்கள் விரும்பு கின்றனர்.

இத்தகைய நபர்கள் மீது பாஜக அரசு நடவடிக்கை எடுத்தால், காங்கிரஸ் அவர்களுக்கு ஆதரவாக களமிறங்குகிறது. பொதுவாகவே, காங்கிரஸுக்கு தலித்துகள் மீதும் பழங்குடியினர் மீதும் வெறுப்பு உள்ளது. அவர்களை சக மனிதர் களாக ஏற்றுக்கொள்ளவே அக்கட்சி தயக்கம் காட்டுகிறது. இதுபோன்ற மனநிலையில் இருப்பவர்கள், எவ் வாறு அந்த மக்களுக்கு நன்மை செய்வார்கள். மத்தியில் தொடர்ச்சி யாக 10 ஆண்டு ஆட்சியில் இருந்த காங்கிரஸ், சத்தீஸ்கரின் வளர்ச்சிக்காக ஒன்றும் செய்ய வில்லை. மாறாக அவர்களின் ஆட்சி யில் நக்சல்களின் கோட்டையாக சத்தீஸ்கரை வைத்திருந்ததுதான் காங்கிரஸ் செய்த சாதனையாகும்.

இவ்வாறு சத்தீஸ்கருக்கு துரோ கம் செய்த காங்கிரஸை மாநில மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார் கள், சத்தீஸ்கர் மாநிலத்தை வள மிக்க மாநிலமாக மாற்ற வேண்டும் என முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கனவு கண்டார். அந்தக் கனவு நனவாகும் வரை நான் ஓயப்போவதில்லை. சத்தீஸ் கரில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எனது தலையாயப் பணியாகும்.

ஒருபுறம், சத்தீஸ்கரில் நக்சல் களை ஒழிப்போம் எனக் கூறும் காங் கிரஸ், மறுபுறம் நக்சல் சித்தாந்தத் துக்கு ஆதரவு அளிக்கிறது. யாருக் காக காங்கிரஸ் இந்த நாடகத்தை ஆடுகிறது, நக்சல் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் காங்கிர ஸுக்கு இந்தத் தேர்தலில் நீங்கள் (சத்தீஸ்கர் மக்கள்) தக்க பாடம் புகட்ட வேண்டும். உங்களுக்கு இழைத்த துரோகங்களுக்கு காங் கிரஸ் பதில் கூறியே தீர வேண்டும். சத்தீஸ்கரில் இப்போது இருப்பது போன்ற வளர்ச்சித் திட்டங்கள் தொடர வேண்டுமா அல்லது மீண்டும் இம்மாநிலம் நக்சல்களின் கைகளுக்கு செல்லவேண்டுமா என்பதை முடிவுசெய்யவேண்டியது நீங்கள்தான்.

சத்தீஸ்கரை அனைத்து நிலை களிலும் உயர்த்தி நாட்டிலேயே முதன்மை மாநிலமாக மாற்றுவதே பாஜகவின் லட்சியம். எனவே, இந்தத் தேர்தலில் பாஜகவை பெரும் பான்மை பலத்துடன் நீங்கள் மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

தேர்தல் அறிக்கை

இதனிடையே, சத்தீஸ்கர் மாநிலத்துக்கான பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படு கிறது. இதில், விவசாயிகளையும் இளைஞர்களையும் கவரும் அம்சங்கள் இடம்பெற்றிருப்பதாக சத்தீஸ்கர் வேளாண் துறை அமைச் சர் பிரிஜ்மோகன் அகர்வால் தெரி வித்தார். இதுகுறித்து ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது, “பாஜகவின் தேர்தல் அறிக்கையானது மாநிலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத் தும் என்பது உறுதி. இதில், விவ சாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவது தொடர் பான திட்டங்களும் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இத்தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்” என அவர் கூறினார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close