[X] Close

பணமதிப்பு நீக்கம்!- காங்கிரஸுக்கு பாஜக எழுப்பும் 10 கேள்விகள்


demonitisation-bjp-asks-10-questions-to-congress

  • பாரதி ஆனந்த்
  • Posted: 08 Nov, 2018 14:43 pm
  • அ+ அ-

பணமதிப்பு நீக்கம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு பாஜக 10 கேள்விகள் எழுப்பியுள்ளது. 

2016 நவம்பர் 8 இரவு பணமதிப்பு நீக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக அறிவித்தார். இன்றுடன் பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
இந்நிலையில், பணமதிப்பு நீக்கம்  தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு பாஜக 10 கேள்விகள் எழுப்பியுள்ளது. #CorruptCongressFearsDemo என்ற ஹேஷ்டேக் கீழ் இந்தக் கேள்விகளைப் பகிர்ந்துள்ளது.

கேள்வி 1: இந்திய அரசாங்கம் ஊழலுக்கு எதிராக முன்னெடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கு எதிராக போராடுவதில் காங்கிரஸ் ஏன் பெருமை கொள்கிறது. எதைப் பார்த்து அவர்கள் அஞ்சுகிறார்கள்?

கேள்வி 2: கறுப்புப் பணம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் காங்கிரஸ் ஏன் துணை போகிறது?

கேள்வி 3: வரிப்பணத்தை விரிவாக்கம் செய்யும் ஒரு துணிச்சலான முடிவை எதிர்க்கும் காங்கிரஸின் மனப்பாங்கு, வளர்ச்சிக்கு எதிரான அரசியலை எத்தகையது எனக் கொள்வது?

கேள்வி 4: ஊழல், நில பேரம், பணப் பரிவர்த்தனை, அயல்நாட்டு வங்கிக் கணக்கிகள் என பலவகையிலும் ஊழலில் தோய்ந்திருக்கும் முன்னாள் நிதியமைச்சர் எந்த முகத்தைக் கொண்டு எங்களது கொள்கைகளை விமர்சிக்கிறார்?

கேள்வி 5: காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா, நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட முறையில் பணமதிப்பு நீக்கத்தை எதிர்த்தார். ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இந்தியா 2 கோடி ரூபாய் வரி வருவாயாகப் பெற்றுள்ளது. இதற்காகத்தான் நீங்கள் பணமதிப்பு நீக்கத்தை எதிர்த்தீர்களா?

கேள்வி 6: முறைப்படுத்தப்படாத பொருளாதாரம் ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை அத்துமீறுவதாகும். பணமதிப்பு நீக்கம் என்பது பொருளாதாரத்தை முறைப்படுத்தியிருக்கிறது. இதனால் நடுத்தர வர்க்க மக்கள் பயனடைந்துள்ளனர். இதை ஏன் காங்கிரஸ் எதிர்க்கிறது?

கேள்வி 7: ஜிடிபி அதிகரித்திருக்கிறது, தொழில் தொடங்குவதற்கு சுலபமான நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேறியிருக்கிறது. இந்த எண்களை எல்லாம் மறுக்கும் மனநிலையில் ஏன் காங்கிரஸ் இருக்கிறது. உலக அரங்கில் இந்தியாவின் பொருளாதார வல்லமைக்கு அங்கீகாரம் கிடைப்பதை ஏன் காங்கிரஸ் வருத்தத்துடன் பார்க்கிறது?

கேள்வி 8: இந்தியா உலகரங்கில் முன்னேறும்போது காங்கிரஸ் ஏன் தேசத்தின் புகழை மங்கச் செய்கிறது. ஏன் மக்களை திசை திருப்புகிறது.

கேள்வி 9: இப்போது சிறு, குறுந்தொழில்களைப் பற்றி கவலைப்படும் காங்கிரஸ் தனது ஆட்சிக் காலத்தில் எப்போதாவது இதைப் பற்றி யோசித்திருக்கிறதா? வரிக் குளறுபடிகள், ரெய்டு, தற்காலிக கொள்கைகள்.. இவற்றைத் தவிர காங்கிரஸ் சிறு தொழிலாளர்களுக்கு என்ன செய்திருக்கிறது?

கேள்வி 10: ஊழலையும், கறுப்புப் பணத்தையும் ஒழிக்க காங்கிரஸ் தனது ஆட்சிக் காலத்தில் ஏதாவது ஒரு கெடுபிடி நடவடிக்கையை எடுத்திருக்கிறதா?

இவ்வாறு 10 கேள்விகளை காங்கிரஸ் கட்சிக்கு பாஜக முன்வைத்துள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close