[X] Close

நெயில் பாலிஷ் போடக்கூடாது!- இஸ்லாமிய பெண்களுக்கு பத்வா  


muslim-women-should-not-wear-nail-polish

  • பாரதி ஆனந்த்
  • Posted: 05 Nov, 2018 13:27 pm
  • அ+ அ-

முஸ்லிம் பெண்கள் நெயில் பாலிஷ் எனப்படும் நகப்பூச்சு போடக்கூடாது அதற்கு பதிலாக மருதாணி மட்டுமே போட வேண்டும் என்று முஸ்லிமே உலேமா அமைப்பு பத்வா விதித்துள்ளது.

இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட இஸ்லாமிய அமைப்பான தாருல் உலூம் தியோபந்த் அமைப்பே இந்த பத்வாவை விதித்துள்ளது.
இது குறித்து முஃப்தி இஷ்ரார் கவுரா என்ற போதகர், "தாருல் உலூம் தியோபந்த் முஸ்லிம் பெண்களுக்கு புதிய தடை உத்தரவைப் பிறப்பிக்கிறது. இதன்படி பெண்கள் நகப்பூச்சு பூசக்கூடாது. இது இஸ்லாத்துக்கு எதிரானது. பெண்கள் மருதாணியே வைத்துக் கொள்ள வேண்டும். 

இஸ்லாம் பெண்கள் அழகுப் பொருட்களே பயன்படுத்தக்கூடாது எனத் தடை செய்யவில்லை. அவர்கள் நெயில் பாலிஷ் பயன்படுத்தலாம். ஆனால் தொழுகைக்கு முன்னதாக அதை அப்புறப்படுத்த வேண்டும். புனித நீரால் கழுவ வேண்டும். நகப்பூச்சு புனித நீர் முழுவதுமாக உடலில் படுவதைத் தவிர்த்து விடுகிறது" என்றார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இதே அமைப்பு முஸ்லிம் பெண்கள், ஆடவர் கால்பந்து போட்டியைப் பார்க்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. இதேபோல் கண் புருவம் தீட்டுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close