[X] Close

‘அதென்ன பறவை எச்சமா?’ - பிரதமர் மோடியை ட்விட்டரில் கேலி செய்த திவ்யா ஸ்பந்தனா; மூண்டது சர்ச்சை: பாஜக கடும் கண்டனம்


divya-twitter-post-creates-trouble

  • kamadenu
  • Posted: 01 Nov, 2018 16:37 pm
  • அ+ அ-

அரசியல் சொல்லாடல்கள் நாளுக்குநாள் மிகவும் தாழ்வான நிலைக்கு சறுக்கிக் கொண்டே செல்கிறது என்பதற்கான சமீபத்திய உதாரணம் தான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நடிகை திவ்யா ஸ்பந்தனாவின் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி குறித்த ட்விட்டர் பதிவு.

ஒற்றுமையின் சிலை என்று வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் உலகின் மிகமிகப்பெரிய சிலையின் பாதத்துக்குக் கீழ் நரேந்திர மோடி நின்று கொண்டிருக்கும் படத்தை தன் ட்விட்டரில் பதிவிட்ட திவ்ய ஸ்பந்தனா பெரிய சிலையின் மிகப்பெரிய பாதங்களுக்கு அருகில் சிறிய உருவமாக பிரதமர் மோடி நின்று கொண்டிருப்பதை, “அது என்ன பறவை எச்சமா?” என்று கேலி செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலுக்கான 182 மீ உயரச் சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

இந்நிலையில் பிரதமரின் புகைப்படத்தில் தெரிந்த சிறிய உருவத்தை வைத்து கேலி செய்த திவ்யாவின் ட்வீட் 3800 லைக்குகளையும் 1200 மறு ட்வீட்களையும் பெற்றது.

நெட்டிசன்கள் பலர் இது நகைச்சுவை உணர்வென்று பாராட்ட, மற்ற சிலர் இது ஒரு நாட்டின் பிரதமருக்கு நிகழும் மிகப்பெரிய இன்சல்ட் என்று திவ்யாவைத் தாக்கியும் உள்ளனர்.

இதனையடுத்து பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், திவ்யா ஸ்பந்தனாவை விமர்சித்து, இது சர்தார் படேல் மீதான வரலாற்று ரீதியான இழிவு, மோடி மீதான நோய்க்கூறான வெறுப்பு என்று சாடியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மதிப்புகள் சரிந்து கொண்டிருப்பதைத்தான் இது காட்டுகிறது.

கடந்த செப்டம்பரில் பிரதமர் மோடியை அவதூறாகப் பேசியதற்காக திவ்யா ஸ்பந்தனா மீது தேசவிரோத வழக்குத் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close