[X] Close

சபரிமலை பக்தர்கள் கூட்டத்தை நிர்வாகிக்க டிஜிட்டல் முறை அறிமுகம்


kerala-police-to-implement-digitised-crowd-management-system-in-sabarimala

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 31 Oct, 2018 12:26 pm
  • அ+ அ-

சபரிமலை கோயிலில் பக்தர்கள் சிக்கலின்றி தரிசனம் செய்ய, கேரள போலீஸ், பக்தர்கள் கூட்டத்தை டிஜிட்டல் முறையில் கண்காணித்து முறைப்படுத்தவுள்ளது. இந்த வருடம் முதல் இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது. 

இனி, பக்தர்கள், எந்த தேதியில், என்ன நேரத்தில் தரிசனம் செய்ய விரும்புகிறார்கள் என்பதை www.sabarimala.com என்ற தளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் நிலக்காலிலிருந்து பம்பா வரை செல்ல பஸ் டிக்கெட்டுகளையும் பதிவு செய்துகொள்ளலாம். இந்த பதிவு 48 மணிநேரங்களுக்குச் செல்லுபடியாகும். 

சமீபத்தில் எந்த வயதுப் பெண்களும் சபரிமலைக் கோவிலுக்குச் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, சபரிமலை சுற்றியுள்ள பகுதிகளில் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது. 
 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close