[X] Close

சிறுமிக்கு நியாயம் செய்ய முடியவில்லை; எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்!- காங்., எம்.எல்.ஏ. 


my-resignation-is-a-symbol-of-protest

க்ருஷ்ண சந்திர சகாரியா

  • பாரதி ஆனந்த்
  • Posted: 31 Oct, 2018 12:21 pm
  • அ+ அ-

பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமிக்கு நியாயம் செய்ய முடியவில்லை என்பதால் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் எனக் கூறி பதவியை துறந்துள்ளார் ஒடிசா மாநில கனக்கிரஸ் எம்.எல்.ஏ., க்ருஷ்ண சந்திர சகாரியா.

ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் குண்டுலி எனும் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13 வயது சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். சீருடையில் இருந்த காவலர்களால் அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

ஆனால், அந்தப் புகாரை காவலர்கள் மறுத்துவிட்டனர். மனமுடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், சிறுமி வழக்கில் நீதிக்கு குரல் கொடுத்து வந்த எம்.எல்.ஏ., க்ருஷ்ண சந்திர சகாரியா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து சகாரியா கூறும்போது, "கோராபுட் மாவட்ட எம்.எல்.ஏ.,வாக நான் பலாத்காரம் செய்யப்பட்ட குண்டுலி சிறுமிக்கு ஓராண்டுக்குப் பின்னரும்கூட நீதி சேர்க்க முடியவில்லை. இதனால், நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது எதிர்ப்பின் அடையாள,. மேலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நான் எனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன்" எனக் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close