[X] Close

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: கர்னல் புரோகித், சாத்வி பிரக்யாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு


malegan-bomb-blast

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நேற்று மும்பை என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு வெளியில் வரும் சாத்வி பிரக்யா சிங். படம்: பிடிஐ

  • kamadenu
  • Posted: 31 Oct, 2018 09:30 am
  • அ+ அ-

மும்பை

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா சிங், முன்னாள் ராணுவ அதிகாரி காந்த் புரோகித் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக மும்பை என்ஐஏ நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பரில் ஒரு மசூதிக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை மாநில தீவிரவாதத் தடுப்புப் படையினர் (ஏடிஎஸ்) விசாரித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாத்வி பிரக்யா சிங், முன்னாள் லெப்டினன்ட் கர்னல் காந்த் புரோகித் உள் ளிட்ட 7 பேருக்கு எதிராக மும்பையில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

தீவிரவாத தாக்குதலில் ஈடு பட்டதாக சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழும் சதித் திட்டம் மற்றும் கொலையில் ஈடுபட்டதாக இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும் இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப் பட்டன. என்ஐஏ சிறப்பு நீதிபதி வினோத் பதல்கர், இவர்கள் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தார். இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close