[X] Close

ராஜஸ்தான் தேர்தல்: மதத்தின் பெயரால் வாக்கு சேகரித்த பாஜக அமைச்சர் மீது வழக்கு


rajasthan-polls-fir-against-bjp-minister-for-seeking-votes-of-hindus

தான் சிங் ராவத்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 30 Oct, 2018 18:04 pm
  • அ+ அ-

மதத்தின் பெயரால் வாக்கு சேகரித்து தேர்தல் விதிமுறைகளை மீறியதால் ராஜஸ்தானின் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர்ர் தான் சிங் ராவத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அக்டோபர் 26-ஆம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தலைவர் ராவத், "ராஜஸ்தானில் இந்துக்கள் அனைவரும் பாஜகவுக்கு ஓட்டளிக்க வேண்டும். முஸ்லிம்கள் அனைவரும் மொத்தமாக காங்கிரஸுக்கு ஓட்டளிக்க முடியுமென்றால் இந்துக்களும் பாஜகவுக்கு அதை செய்ய வேண்டும். அதிகப் பெரும்பான்மையுடன் கட்சியை வெற்றுபெறச் செய்ய வேண்டும்" என்று பேசியுள்ளார்.

மதத்தை வைத்து ஓட்டு சேகரித்ததால், இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும். எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 7-ஆம் தேதி ராஜஸ்தானில் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை 11-ஆம் தேதி நடக்கிறது. 

இந்நிலையில், மற்றொரு பாஜக அமைச்சர் குலாப் சந்த் கடாரியா, "ஓட்டுக்கு மதம் கிடையாது. தேசத்தின் முன்னேற்றத்துக்காக உழைப்பவருக்கே எல்லோரும் வாக்களிப்பார்கள். எங்கள் கட்சி எப்போதும் மதத்தின் பெயரால் வாக்கு சேகரித்ததில்லை" என்று கூறியுள்ளார். 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close