[X] Close

எந்த 2 மணி நேரம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!- உச்ச நீதிமன்றம் கெடுபிடி


sc-strict-on-crackers-verdict

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 Oct, 2018 12:57 pm
  • அ+ அ-

தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி. நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் அதிரடியாகக் கூறியுள்ளது.

பட்டாசு வெடிக்க மேலும் 2 மணி நேரம் அனுமதி கோரி தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. காலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி கோரப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி. நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம். இரண்டு மணி நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிக்கக்கூடாது என்பதில் தெளிவாக உள்ளோம் எனக் கூறியுள்ளது.

முன்னதாக, சுற்றுச்சூழல் பாதிப்பு, உடல்நலக் குறைவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பட்டாசு  உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

நீதிபதி ஏ.கே. சிக்ரி மற்றும் அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது. தீபாவளியன்று 2 மணி நேரத்துக்கு மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. காலையிலும் கூடுதலாக 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி கோரியது. ஆனால், இதனை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

பட்டாசு கெடுபிடிகள் என்னென்ன?

  1. தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டும் தான், பட்டாசு வெடிக்க வேண்டும்.
  2. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது இரவு 11:55 மணி முதல் 12:30 மணி வரை பட்டாசு வெடிக்கலாம். 
  3. குறைந்த அளவு சத்தம் வரும் பட்டாசுகள் மட்டுமே வெடிக்கப்பட அனுமதி வழங்கப்படுகிறது. அதுவும் உரிமம் வாங்கியுள்ள விற்பனையாளர்கள் மூலம் மட்டுமே விற்கப்பட வேண்டும். 
  4. தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பது மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று என்பதை அறிகிறோம். அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் முடிவு எடுத்துள்ளோம். 
  5. இணையம் வாயிலாக பட்டாசு விற்பனை செய்யப்படக் கூடாது. மீறி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close