[X] Close

கேரள அரசை கவிழ்க்கும் சக்தி அமித் ஷாவுக்கு இல்லை!- பினராயி விஜயன்


kerala-cm-attacks-amitshah

  • பாரதி ஆனந்த்
  • Posted: 29 Oct, 2018 16:38 pm
  • அ+ அ-

கேரள அரசை கவிழ்க்கும் சக்தி அமித் ஷாவுக்கு இல்லை என பதிலடி கொடுத்திருக்கிறார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்.

பாலக்காட்டில் பேசிய முதல்வர், "பாஜகவின் காட்ஃபாதர் அமித் ஷா கேரளா வந்தபோது ஏதோ பிரகடனம் செய்து சென்றிருக்கிறார். இந்த அரசை கவிழ்ப்பதாகக் கூறிச் சென்றிருக்கிறார். எனக்கென்னவோ கேரள அரசை கவிழ்க்கும் சக்தி அமித் ஷா உடலில் இல்லை எனத் தோன்றுகிறது. அவர் உடல்வாகைப் பாருங்கள். அது தண்ணீரால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இங்கே இடமில்லை. இதையெல்லாம் அமித் ஷா குஜராத்தில் செய்தால் நல்லது" என்றார்.

மேலும் பேசும்போது, "உச்ச நீதிமன்றத்தை மிரட்டும் தொணியில் நீங்கள் பேசி வருகிறீர்களே. உச்ச நீதிமன்றத்தை மிரட்ட நீங்கள் யார். இனி பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும். அந்தத் தீர்ப்பும் உங்களுக்கு சாதகமாக வரவேண்டும் என நினைக்கிறீர்களா?

எதோ பெரிய திட்டத்தோடு இங்குவந்து யாத்திரை செய்தீர்கள் ஆனால் கடைசியில் இங்கிருந்து ஓடும்படிதான் நேர்ந்தது"என்றும் பினராயி பேசினார்.

முன்னதாக கண்ணூரில் பேசிய அமித்ஷா, சபரிமலை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தார். நீதிமன்றங்கள் நடைமுறைக்கு சாத்தியமான தீர்ப்புகளையே வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close