[X] Close

லஞ்சம் கேட்டதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ., கைது


gujarat-congress-mla-arrested-for-demanding-bribe

  • பாரதி ஆனந்த்
  • Posted: 29 Oct, 2018 11:17 am
  • அ+ அ-

குஜராத் மாநிலத்தின் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒருவர் லஞ்சம் கேட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் த்ரங்கதாரா தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., பர்சோட்டம் சபாரியா. இவர் பாசனத்துறை பொறியாளர் ஒருவரிடம் லஞ்சம் கோரியுள்ளார்.

இந்தப் புகாரின் பேசில் எம்.எல்.ஏ.,வும் அவருக்கு உடந்தையாக இருந்த வழக்கறிஞர் பரத் கணேஷ், உதவி பொறியாளர், ஒப்பந்ததாரர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து போலீஸ் எஸ்.பி. கூறும்போது, "சபாரியா ரூ.60 லட்சம் லஞ்சம் கோரியிருக்கிறார். மாவட்ட நீர்ப்பாசனத்துறை பொறியாளரிடமிருந்து அவர் லஞ்சம் கோரியிருக்கிறார். கடைசியில் ரூ.35 லஞ்சத்துகு ஒப்புக்கொண்டுள்ளார். வழக்கமாக எம்.எல்.ஏ.,வின் வழக்கறிஞர்தான் பணத்தைப் பெறுவார். அப்படிப் பெறும்போதுதான் கைது செய்தோம்" என்றார்.

மாவட்டத்தில் பல்வேறு பாசனத்திட்டங்களை மேற்கொள்வதற்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பல வேலைகளுக்கு பணம் ஒதுக்கப்பட்டும்கூட வேலை நடக்கவில்லை என்று தொடர்ந்து புகார் வந்தது. விசாரணையின் அடிப்படையிலேயே எம்.எல்.ஏ., அவரது வழக்கறிஞர், உதவிப் பொறியாளர், ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை தரப்பு கூறியுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close