[X] Close

மோடி ஒரு டெங்கு கொசு- காங்கிரஸ் எம்.எல்.ஏ. சாடல்


congress-mla-calls-pm-modi-dengue-mosquito

  • பாரதி ஆனந்த்
  • Posted: 29 Oct, 2018 10:31 am
  • அ+ அ-

பிரதமர் மோடியை சிவலிங்கம் தலையில் இருக்கும் தேள் என்று யாரோ ஆர்.எஸ்.எஸ்., காரர் கூறியதாக மேற்கோள் காட்டிய சசி தரூர் சிக்கலில் இருக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஒருவர் மோடியை டெங்கு கொசு என விமர்சித்திருக்கிறார்.

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ., பரினிதி ஷிண்டேதான் இவ்வாறு பேசியிருக்கிறார்.

அவர் பேசியதாவது:
நம் நாட்டில் புதுவிதமான டெங்கு கொசு ஒன்று இருக்கிறது. அதன் பெயர் மோடி பாபா. நாட்டில் எல்லோருமே அந்த கொசுவால் பாதிக்கப்பட்டுள்ளர்.
அந்த கொசுவுக்கு பொய் சொல்லும் நோய் இருக்கிறது. சகோதர, சகோதரிகளே நான் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவேன், உங்கள் வங்கிக் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் செலுத்துவேன் என்றெல்லாம் பொய் சொல்லும்" எனப் பேசியுள்ளார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ஏற்றத்துக்கு பாஜக அரசே காரணம் என்றும் அவர் விமர்சித்துப் பேசினார்.

சசி தரூரின் விமர்சனம் பாஜகவை கோபத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் தற்போது காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.,வின் இந்த விமர்சனமும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close