[X] Close

சபரிமலை புனிதத்தை காப்பாற்றுவதில் பக்தர்கள் பக்கம் பாஜக!- அமித் ஷா 


bjp-is-standing-like-a-rock-with-devotees

  • பாரதி ஆனந்த்
  • Posted: 27 Oct, 2018 14:01 pm
  • அ+ அ-

கேரளா சென்றுள்ள பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, கண்ணூரில் பேசும்போது "சபரிமலையில் புனிதத்தைக் காப்பதில் பக்தர்கள் பக்கம் பாஜக நிற்கிறது" எனப் பேசியுள்ளார்.

கேரளாவின் சிவகிரியில் உள்ள நாராயணகுரு மடத்தில் இன்று மண்டல பூஜை நடக்கிறது. சிவகிரி மடத்தில் நடக்கும் நாராயணகுரு பூஜையில் பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கண்ணூர் வந்தார்.
சபரிமலை விவகாரத்தில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அமித்ஷா கேரளா வந்துள்ளது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

அரசு ஆணையை சுட்டிக் காட்டி வன்முறை நடத்த விரும்புவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நம் நாட்டில் நிறைய கோயில்களில் விதவிதமான பழக்கவழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன. இன்று கேரளாவில் மத நம்பிக்கைக்கும் அரசாங்கத்தின் கொடுமைக்கும் இடையே போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 

பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் சார்பு இயக்கங்களைச் சேர்ந்த 2000 செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சபரிமலையின் புனிதத்தை காப்பாற்றுவதில் பாஜக பக்தர்கள் பக்கம் பாறைபோல் நிற்கிறது. கேரளாவின் இடதுசாரி அரசுக்கு இது ஓர் எச்சரிக்கை.
இவ்வாறு அவர் பேசினார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close