[X] Close

ஹைதராபாத்துக்கு புறப்பட்டுச் சென்ற கோஏர் விமானம் நடுவானில் டெல்லி திரும்பியது: 90 பயணிகள் பத்திரமாக வேறுவிமானத்திற்கு மாற்றம்


go-air-flight-problem

பிரதிநிதித்துவப் படம்

  • பால்நிலவன்
  • Posted: 26 Oct, 2018 18:31 pm
  • அ+ அ-

ஹைதராபாத்துக்கு புறப்பட்டுச் சென்ற கோஏர் நிறுவனத்தின் ஜி8 423 விமானம் ஒன்று இன்று நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது பாதிவழியிலேயே டெல்லி திரும்பியது.சந்தேகத்திற்குரிய தொழில்நுட்ப கோளாறுதான் இதற்கு காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கோஏர் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

டெல்லியிலிருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்த ஜி8 423 விமானத்தில் இன்று சந்தேகத்திற்குரிய வகையிலான தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஹைதாராபாத் செல்லாமலேயே இவ்விமானம் டெல்லி திரும்ப நேரிட்டது.

விமானத்தில் என்னவிதமான பழுது ஏற்பட்டது என்பதை குறிப்பிட்டு சொல்லமுடியவில்லை. ஆனால் இதில் பொருத்தப்பட்ட பிராட் & விட்னி பிராண்டுகளால் வடிவமைக்கப்பட்ட ஏ 320 நியோஸ் எஞ்சின் சில சிக்கல்களை எதிர்கொண்டதாகத் தெரிகிறது. மற்றபடி இவ் விமானம், டெல்லி விமான நிலையத்தில் எந்தவிதப் பிரச்சினையும் இன்றி சாதாரணமாகவே தரையிறங்கியது.

இதனை அடுத்து பயணிகளை தரையிறக்காமலே அப்படியே பழுது ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட விமானத்திலிருந்து புறப்பட தயாராக வைத்திருந்த வேறு விமானத்திற்கு 90 பயணிகளும் பத்திரமாக மாற்றப்பட்டனர். 

ஆய்வு மற்றும் விசாரணை செய்யப்பட்ட பிறகு ஜி8 423 விமானம் சேவைக்கும் செயல்பாட்டுக்கும் தகுதிவாய்ந்ததாக அறிவிக்கப்பட்டது.

இவ்வாறு கோஏர் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close