[X] Close

ட்ரெயின் 18!- ஏசி, வைஃபை வசதியுடன் அதி நவீன விரைவு ரயில் விரைவில் வெள்ளோட்டம்


indian-railways-takes-big-leap-with-made-in-india-train-18

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Oct, 2018 16:44 pm
  • அ+ அ-

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் குளிர்சாதன வசதி, வைஃபை வசதி, ஸ்லைடிங் கதவுகள் என அதி நவீன வசதியுடன் தயாராகி இருக்கிறது ட்ரெயின் 18 ரயில்.

சதாப்தி ரயிலுக்கு நிகரான வேகத்தில் இயங்கக்கூடிய இந்த ரயில் வரும் 29-ம் தேதி வெள்ளோட்டம் விடப்படுகிறது.
இந்த ரயிலின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் இயங்கக்கூடியது. ரயிலின் இருபுறமும் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 16 பெட்டிகள் உள்ளன. அத்தனையும் ஏசி வசதி கொண்டதே.

ஸ்லைடிங் டோர் எனப்படும் வசதியுடன் கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்லைடிங் வீல் சேர் வசதியும் இருக்கிறது. புஷ்பேக் வசதி கொண்ட இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளன.

அனைத்து பெட்டிகளிலும் வைஃபை வசதி உள்ளது.  அதிநவீன் வேக்கம் டாய்லெட் வசதி செய்யப்பட்டுள்ளது.

எல்இடி திரை வசதி, ஸ்பீக்கர் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் பயண விவரங்களை அறிய முடியும்.
உடைமைகளை வைக்கும் இடமும் விசாலமாக்கப்பட்டுள்ளது. 

முதல் கட்ட தகவலின் படி ஒவ்வொரு கோச்சிலும் 44 முதல் 78 பயணிகள் வரை பயணிக்கலாம் எனத் தெரிகிறது.
இத்தகைய வசதி கொண்ட இந்த ரயில் விரைவில் வெள்ளோட்டம் விடப்படுகிறது.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close