[X] Close

சபரிமலையில் பக்தர்கள் போர்வையில் போலீஸ் வன்முறை? - புகைப்பட ஆதாரம் சிக்கியதால் கேரள அரசுக்கு நெருக்கடி


sabarimala-dispute-more-than-2000-detained

  • நெல்லை ஜனா
  • Posted: 26 Oct, 2018 14:48 pm
  • அ+ அ-

சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்குக் கடந்த மாதம் 28-ம்தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டதில் இருந்து எதிர்ப்புத் தெரிவித்து, கேரளாவில் நாள்தோறும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடந்து வருகின்றன. 10வயது முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்கமுடியாது என்று தொடர்ந்து போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மாதாந்திர பூஜைக்காக கடந்த வாரம் திறக்கப்பட்டது. ஆனால், பெண்களை அனுமதிக்கக் கேரள அரசு தீவிரம் காட்டி போதுமான போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும் போராட்டக்காரர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காமல் போராடம் நடத்தினர்.

கோயிலுக்குள் வர முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பிவிடப்பட்டனர். இதனால், பதற்றமான சூழல் ஏற்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் திறந்து இருந்த 5 நாட்களே பம்பை, நிலக்கல், சபரிமலையில் போர்க்களம் போல் காட்சியளித்தது. கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் இறுதி வரை அனுமதிக்கப்படவில்லை.

இந்தநிலையில் ஐயப்பன் கோயிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை தடுத்து பம்பை, சபரிமலை, நிலக்கலில் போராட்டம் நடத்தியது தொடர்பாக கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்து 2 ஆயிரம் பேரை கைது செய்துள்ளனர். மேலும் கலவரம் தொடர்பாக சிலரை தேடி வருவதாக கூறி புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

அவ்வாறு போலீஸார் வெளியிட்ட பட்டியலில் இப்ராகிம் குட்டி என்ற போலீஸ் டிரைவர் சாதாரண சீருடையில் நிற்கும் புகைப்படமும் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன்மூலம், பக்தர்கள் போர்வையில் போலீசாரே வன்முறையை தூண்டி விட்டதாக அம்மாநில பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து கேரள மாநில பாஜக பொதுச்செயலாளர் ரமேஷ் கூறுகையில் ‘‘சபரிமலையில் அமைதியாக நடந்த போராட்டத்தில் வன்முறையை தூண்டியவர்கள் போலீஸ். அவர்கள் வெளியிட்ட தேடுவோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள இப்ராஹும் குட்டி போலீஸ்காரர். இந்த விஷயம் தெரிந்ததும் உடனடியாக படத்தை நீக்கி விட்டனர். பக்தர்கள் போர்வையில் போலீஸ் நுழைந்து வன்முறையை தூண்டி விட்டுள்ளனர்’’ எனக் கூறினார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close