[X] Close

போலீஸ் பைக்கில் போஸ் கொடுத்த கிறிஸ் கெயில்!- வைரலாகும் புகைப்படம்


chris-gayle-spotted-in-mumbai

  • பாரதி ஆனந்த்
  • Posted: 26 Oct, 2018 11:21 am
  • அ+ அ-

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் மும்பை போலீஸின் பைக்கில் அமர்ந்து போஸ் கொடுத்த ஃபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை அந்த அணி 2-0 என முழுமையாக இந்தியாவிடம் இழந்த நிலையில் தற்போது 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 

இந்நிலையில், கெயில்,தனது நெருங்கிய நண்பரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான விராட் கோலியை சந்தித்து 10,000 ரன்களை கடந்து சாதனை படைத்ததற்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அப்போது, மும்பை காவல்துறையினரின் பைக்கில் அமர்ந்து அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால், அவர் காவல்துறையினருடன் இருக்கும் புகைப்படத்தை பார்த்து, அதிவேகமாக வாகனம் ஓடியதற்காக கெய்லுக்கு அபராத சீட்டு வழங்கப்பட்டுள்ளது என சிலர் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வந்தார்கள்.

ஆனால் அவருக்கு அப்படி எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அவர் கோலியை பார்ப்பதற்காக தான் வந்தார் என மும்பை காவல்துறை விளக்கமளித்துள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close